பாம்பின் விஷம்

பாம்பின் விஷத்தை
பல நாள்
குடித்து
இருந்தேன்
இப்போது புளிக்கிறது

நட்பென்று யார்
வந்தாலும்
நான் கேட்பது
ஒன்று தான் '
நீ என் நண்பனா?

காலம் எல்லோருக்கும்
கற்று கொடுப்பது
ஒன்று தான்
நடிக்க

உன்னை போல
ஒருவனை
நண்பனாய் அடைய
நான் செய்த
புண்ணியம் என்ன?
இன்று வரை
யோசிக்கிறேன்
விடை என்று
ஒன்றும் இல்லை

காதலிக்கு முன்பு
உன் காதலே
பெரியது
நினைத்தவன் நான்

என்னோடு உன்னை
பிரிக்க
படைத்தவன் வந்தாலும்
பல பரீச்சை தான்
அது
நீ என்றால் என்ன செய்வேன்?

நட்பிற்கு எதையும்
எதிர்பார்க்க தெரியாது
அதனால் தான்
மண்ணையும்
பொன்னாய்
நினைக்கிறது

வலியில் சொல்கிறேன்
என் வார்த்தையில் கூட
பிழை இல்லை

அவமானமாய்
தோன்றுகிறது
நீ என்னை
அவமதிப்பது

நான் உன்னை
நினைப்பது பாவம்
என்றால்
அதை வாழ் நாள்
முழுவதும்
செய்ய தயார்
ஒரே ஒரு நாள்
நீ என் உண்மையான
நண்பனாய் பழக
நீ தயாரா?

எத்தனை முறை
இதயம்
வலிக்க
உன்னோடு
பிரிவு
மீண்டும்
என் தேடலில்
நீ கிடைத்தாய்
இனி ஒரு முறையும்
என் தேடலில்
நீ என்றால்
காலம்
பழிக்கும்
நட்பை

பாம்பின் விஷம்
கூட
நஞ்சாய் இருந்தால்
உயிர் போகும்
நட்பாய் இருந்தால் ?

வாழ்க்கையில்
முதல் முறை
ஒரு நட்பில் தோல்வி
கண்டவன்
கண்ணீர் அஞ்சலி !!!

எழுதியவர் : கார்த்திக் (27-Jan-15, 1:17 am)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 245

மேலே