உன்னிடம் மூச்சு

உன்னிடம் மூச்சு
சின்னச்சின்ன செம்மீன்களை
பருத்திப்பூ கையால் அள்ளி
என்னவள் முகம் கழுவியிருப்பாலோ
ஆத்தாடி கோடி அழகு
வானிலவும் அந்த கண்ணழகியும்
இரட்டைப் பிறவிகளா?
பூக்களும் அவள் கைறேகையிலிருந்து
என் சுவாசமும் அவள் இதயவறையிலிருந்து...,
அவ தாவணிலே பூயிருக்கு
தேன் அருந்தே பட்டாம்பூச்சி
என்கிட்டே சம்மதம் கேக்குது,
ஏனோ? அவ சொல்லியிருப்பாளோ
என்னவனிடம் கேட்டு வா என்று..
என்னிதயம் உனே சுமக்க
நானும் தாயானேன். அம்மாடி
வாய் திறந்து மனம் விட்டுச்சொல்
உன் மன்னவன் நானென்று
குழந்தை போல பாத்துக்குறேன்.