உன்பிள்ளையாய் பிறக்கவே

அப்பாவை இழந்து அர்த்தமற்று
நின்ற என்வாழ்வின் ஆசான் ..

அண்ணன் என்பதை மறந்து
அன்னைக்கும் சேர்த்து தந்தையான
அவன் இன்றும் கூட எத்தணிக்கும்
இன்னல்களை சொற்பமாய் சுமக்கிறான் ..

ஈரெட்டு வயதில் ஏழ்மையை அகற்ற
பாரத்தை சுமந்தவன் படிப்பை மறந்தவன்
நான்படிக்க ஏணியாய் நின்றவன் -இவனை
அண்ணனென சொல்லவே போதாது இப்பிறவி

நொறுக்கு தீனிக்காய் கொடுத்த சில்லறையிலும்
அன்பாய் அழகான ரோஜாவை வாங்கிவந்து
அன்புதங்கையின் கூந்தலின் சூடியவன்
ஆனந்தத்தின் எல்லையை தொட்டவன் ......

மன வலியென்றும் காதல் தோல்வியென்றும்
மதுதேடி செல்லும் வாலிபர்களின் மத்தியில்
மாறாத மறக்குடி வேந்தனாய் தமிழ்
மண்ணின் மைந்தனாய் வாழும் அசோகன் ...

பொறுமையின் கோபுரம் அவனிருந்த
கருவறையில் நானிருந்ததே என்பிறவியின்
அர்த்தம் அவன்கை பிடித்து நடந்ததே
என்வாழ்க்கை பிடிப்பின் ஆரம்பம் ...

குருவியான குடும்பத்திற்கு கூடானவனே
அருவியாய் எங்களை குளிரவைப்பவனே
மறுபிறவி எடுத்துநானே உன்பிள்ளையாய்
பிறந்திடவே பிதற்றுகிறேன்....

அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அனைவரும் வாழ்த்திட வேண்டுகிறேன் ..
......

எழுதியவர் : பிரியாராம் (27-Jan-15, 2:43 pm)
பார்வை : 309

மேலே