இயற்கையின் கழுத்தில்

பூமியில் நெகிழி (பிளாஸ்ரிக்)

இளமை சூட்டில் எம்இதயக்கூட்டில்
எழுதி வைப்போம் இது எங்களின்
பூமி என்று

எத்தனை தலைமுறை கடந்துவிட்டோம் -இந்த பூமியில்
எங்கும் நடந்துவிட்டோம்
எதிர்கால தலைமுறையின்
எதிர்காலம் என்பது இறந்தகாலம்
என்றாகுமோ??

பூமி புதைந்த பொக்கிசங்களின்
களஞ்சியம் அல்லவோ
விளைந்த முத்துக்களின்
வீடும் அல்லவோ

மண்ணில்
விதைகள் புதைத்தால்
விருட்சங்கள் கொடுக்கும்
கரிகள் புதைந்தால்
வைரங்கள் கொடுக்கும்
மரங்கள் புதைந்தால்
கனிமங்கள் கொடுக்கும்
நெகிழிகள் புதைந்தால்
அத்தனையும் கெடுக்கும்

உக்கிய பொருளை எல்லாம்
உயர் தரமாய் துப்பிய பூமி
செரிக்காத நெகிழிகளால்
விக்கிநிக்கிறது சத்தமின்றி

மீனவன் தூண்டிலில்மண்புழு போல
பூமியின் தோலினுள் சேர்க்கிறான்
நஞ்சினை

இயற்கையின் வண்ணத்தில்
தீட்டிய பூமியை
மனிதனின் செயற்கை மழைகள்
கரைத்திட போகிறதே

நெகிழிகள் (பிளாஸ்ரிக் )மண்ணில்
சேராமல் தடுக்க
உன்னால் , என்னால் முடியாது
நம்மால் முடியாதது உண்டா உலகில்

நம்பி கை கொடுப்போம்
நம்பிக்கையோடு
சுத்தமான பூமியை
விட்டு செல்வோம் எம் சந்ததிகளுக்கு


A

எழுதியவர் : இணுவை லெனின் (27-Jan-15, 1:54 pm)
பார்வை : 110

மேலே