உணவு

அம்மா சொன்னாள்!

பாத்திரத்தின் ஓரத்திலிருந்த
உருண்டைச் சோறு
இராத்திரிக்கென்று!

இல்லாதவன் வீட்டில்
இருவேளை உணவு கூட
ஆடம்பரமான விருந்துதான்!

ஒருபிடி உணவுக்காய்
ஒவ்வொரு நாளும்
ஓயாத பாடுபடும்
நாங்கள் எல்லாம்
இறைவா
உன் படைப்பில்
பூமிக்கே பாரமோ?
ஏனிந்த பாகுபாடு?

என்றேனும்
இல்லாதவனும்
இயலாதவனும்
இன்புற்றிருக்கச்
செய்யாயோ?

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (27-Jan-15, 1:29 pm)
Tanglish : unavu
பார்வை : 93

மேலே