வேற்றுமையில் ஒற்றுமை

பாலியம் பருவமாம் வற்சத் தின்பின்
சாதிம தமின்றிக் கூட்டி னார்கள்
நண்பர் வட்டமா கநொறுவை புசிக்கத்
தொடர்ந் துமனம் நொறுங்கா தவாறுப்
பகிர்ந்து உண்ணல் வேளை யில்ஓர்
தாய்வயிற் றறுப்பிள் ளைகள் அனைவரும்
வியப்பில் தோற்கடிக் கப்பட் டனராம்
கௌமா ரம்பரு வமாம்கா தல்பரு
வமவர் களேகா தலித்ததோ மனங்களை
மட்டும் மல்லஇ னங்களை இறுக்கிஅ
ணை க்கும் இந்தியா வைத்தாய் நாட்டு
வளர்ச்சிக் காக சுயத்தொழில் புனைவோர்
பலருண் டுலட்சங் களும்கோ டிகளும்
குமிந்து கிடந்தா லும்பா ரதத்தின்
காற்றை மட்டும் சுவாசிப் பேன்என்
போனோ பலருண் டுதாய்நாட் டைசொந்
தவீட்டை அழிக்கவந் தசுனா மியினை
கைக்கோர்த் தெதிர்த்துநின் றவீரர் கள்பலர்
தியாகம் செய்தவ ருக்குவீ
ராவணக் கம்செலுத் துவதுநம் கடனே

எழுதியவர் : சரண்யா (27-Jan-15, 3:55 pm)
பார்வை : 110

மேலே