பரமபதம்
நண்பர் நால்வர் ஒன்று சேர்ந்து,
பிற்பகல் பசியாறிய பின்னர்,
பாயை விரித்து, பலகையை அமர்த்தி,
நேர்வர அமர்ந்து, முறையதை கணித்து,
பகடையை உருட்டி, பலகையில் வீசி,
பரமபதத்தை களித்தின்புற்றனரே;
பலகையில் வீசிய பகடையதுவும்,
சிலமுறை பிசகி, காய்கள் அதனை,
சீரும் பாம்புகள் வாயினில் தள்ளிட,
கூறிய பற்கள் கடித்து குதறி,
ஊர்வன ஊடே கீழ் வழுக்கி விட,
மற்ற சமயம் காய்கள் ஏணியில்,
உத்வேகத்துடனே மேல்முன்னேற,
வீழ்ச்சியும், எழுச்சியும்,
வெற்றியும், தோல்வியும்,
வாழ்க்கை என்றிடும் பரமபதத்தின்,
பல நிலைப்பயணம் போன்றது போலே,
என்று நன் உணர்ந்து,
நாள் என்ற பகடையை,
நன்று நாம் உருட்டுவோம்.

