இறப்பு வரை தொடரட்டும் -காதலின் மாயம்
![](https://eluthu.com/images/loading.gif)
உனக்கு காயப்பட்டால்
எனக்கு வலிக்கின்றது ..
எனக்கு வலித்தால்
நீ துடிக்கின்றாய் .
அடிக்கடி ஊடல் கொள்கின்றோம்
அனுதினம் வேண்டும் ஊடலின்
முடிவில் கூடல் என்று
அடம்பிடிக்கின்றோம் .!
அன்னையாய் தந்தையாய்
அன்பை பொழிகின்றோம்
ஆறுதல் வேண்டும் என்றால்
நண்பர்களாய் மாறுகின்றோம் .
என் சிரிப்பில் நீயும்
உன் மகிழ்வில் நானும்
உலகை மறப்பதன் மாயம்
காதல் என்றால் .
இப்படியே தொடரட்டும் என் இறப்பு வரை ....!!