நகரும் பொழுது

நாள் முழுதும் கிடைத்த
பிச்சைக் காசுகளை
நோட்டாக மாற்றிக் கொண்டிருக்கும்
ஒருவன்..

மறுநாள் வரவிருக்கும்
சம்மந்திக்கு
வரதட்சணை பாக்கியை
தருவதற்கு வழி தெரியாமல்
தலையில் கை வைத்தபடி
வயோதிக அப்பா..

லேசான உரசலோடு
சிலிர்த்து சிலிர்த்து
காரணம் இன்றி
சிரித்து சிரித்து மனைவியுடன்
சினிமாவுக்கு போய்க்கொண்டிருக்கும்
புது மாப்பிள்ளை...

சீக்கிரம் படித்து வேலைக்கு போய்
அப்பாவின் கவலை தீர்க்க
அவர் கடனை தீர்க்க..
குடும்ப துயரங்கள் போக்க
பரீட்சைக்கு வேகமாய் படித்துக் கொண்டிருக்கும்
இளம் சிறுவன்..

இவர்களை பார்த்த படி ..
மௌனமாய் கடந்து
நகருகிறது..மெதுவாக
இரவு!

எழுதியவர் : கருணா (30-Jan-15, 2:46 pm)
Tanglish : nagarum pozhuthu
பார்வை : 109

மேலே