வாழ்த்து வெண்பாக்கள்
வான்போல் உயர்ந்து நீடுழி வாழ்ந்திரு
மான்போல் மகிழ்ந்து துள்ளித் திரிந்தே
யாவர்க்கும் கூரையாகி யாதும் உயிராகி
மூவர்க்கும் முதலாகி நிற்க ...!
கண்ணுக்குள் காதல் வளர்த்தே வாழும்
மண்ணுக்கு மானம் உண்டென யாழும்
தமிழால் கவிபுனை மங்கையுளம் கொஞ்சி
விரல்யாழ் வெகுண்டிட வெல்க !
(தோழி ஜெபகீர்தனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து வெண்பா முயற்சியில் )