அன்புத் தங்கை ஜெபாவுக்கு

தங்கை என்ற ஒருத்தி
என் தாய் தராத காரணம்

இன்றுதான் புரிந்தது எனக்கு
அறிந்திருக்கிறாள் அவள் அன்றே
உன்னைப் பற்றி !

கரம் பற்றி நான் உனக்கு
நடை பழக்கி விடவில்லை

காதோரம் கம்மல் வாங்கி
நான் போட்டுவிடவில்லை

நான் முத்தமிட்டு உன்
கன்னம் சிவக்கவுமில்லை

என் காதுமடல் நீ திருகி
அடித்திடவும் இல்லை

எப்படி இணைந்தோம் இப்படி ஒரு
அன்பால் !

தளம் தந்த தங்கத் தாரகையே
விளையேரிப்போனதாம் ஆபரணங்கள்
நீ என் தங்கையானதால்

அண்ணா என்று நீ சொன்னால்
இசைக்கிறதே ஆயிரம் கீதங்கள் !

காற்றில் நீ கையசைத்தாள்
கவிதையாய் மாறாதோ !

ஆயிரம் பேர் வந்தாலென்ன
அற்புத மெட்டில் இசையமைக்க

காத்திருந்து நீ பேச
காது மடல் திறந்து நானிருக்கேன்

பாத்து பாத்து கவி எழுதி நான் என்
செல்லத்துக்கு பிறந்தநாள்
வாழ்த்து சொன்னேன் !

அன்பு தங்கைக்கு இந்த அண்ணனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

எழுதியவர் : முகில் (31-Jan-15, 12:17 am)
பார்வை : 2577

மேலே