முடிவுரை - பொங்கல் கவிதைப்போட்டி 2015

வணக்கம் தோழர்களே...

கடந்த ஒரு மாத காலமாய் விறுவிறுப்பாக நடந்துவந்த தைத்திருநாள் கவிதைப்போட்டியை இந்த படைப்பின் மூலமாக நிறைவுக்கு கொண்டுவருவதில் திருப்தியடைகின்றேன் !

சமூக எழுச்சியையும் விழிப்புணர்வையும் தூண்டும் நோக்கில் படைப்பாளிகளை உத்வேகப்படுத்தும் எண்ணத்துடன் வருடாந்தம் அண்ணன் நிலாசூரியனால் நடாத்தப்பட்டு வந்த இந்த தைப்பொங்கல் கவிதைப் போட்டியை இந்த வருடம் ஏற்று நடாத்தி முடித்ததையிட்டு பெருமகிழ்வடைகின்றேன் !

இயந்திரமாய் சுழலும் தொழிற் சூழலில் கொழுவிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள், தம் சக படைப்பாளிகளுடன் சேர்ந்து நடாத்தும் ஒரு சிறு புரட்சியின் ஆரம்பமென அமைகின்றது இது போன்ற முற்போக்குச் சிந்தனையுடைய செயற்பாடுகள்.

பொழுதுபோக்கிற்காய் ஒதுங்கும் இணையத்தளம் இது போன்ற செயற்பாடுகளால் மட்டுமே பொழுது புலர்வதற்க்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றது என்றால் அது மிகையாகது !

இந்தப் போட்டியில் ஆக்கங்களை எழுதுவதற்காக காத்திரமான, காலத்தின் தேவையை உணர்த்தும் மூன்று தலைப்புகளை வழங்கி, பல படைப்பாளிகளை போட்டிக்கு உள்வாங்கி ஆகச் சிறந்த இருபது படைப்புகளுக்கு/ படைப்பாளிகளுக்கு கெளரவமளித்திருக்கின்றோம்.

இந்த நிகழ்ச்சியினை திருப்திகரமாக நடாத்த உதவிய பெருவுள்ளம் கொண்ட பெருந்தகைகளை ஒருகணம் அறிமுகம் செய்து நன்றி கூறிக் கொள்ள வேண்டும் என்ற அவாவுறுகின்றேன் !

அந்த வகையில் என்னுடைய முதல் நன்றியும் வணக்கமும் அண்ணன் நிலா சூரியன் அவர்களுக்கு சமர்பிக்கப்படுகின்றது !

அண்ணன் நிலா சூரியன் அவர்கள் தான் இந்தப் போட்டியின் தாபகர் என்பதை பலரும் அறிவீர்கள். கடல் கடந்து, சொந்த மண்ணை விட்டு, வேற்று நாட்டில் தொழில் நிமித்தம் வசித்து வந்தாலும், தன்னை விட மண்ணையும் தமிழையும் நேசிக்கும் இவரது எண்ணங்கள், தமிழையும் தமிழரையும் ஓர் உயரிய நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பது திண்ணம் !

தாபகராக, இறுதி கட்ட நடுவராக மட்டுமின்றி இந்த முறை நடந்த போட்டியின் பிரதான அனுசரணையாளராகவும் நிலா அண்ணா தான் இருந்தார் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன் !

தன்னலம் கருதாமல் பணி புரிவதோடு, வார்த்தைகளால் வரையறுக்கப்பட்ட வேலிகளைத் தாண்டி, பணப்பரிசில் வழங்கி தன் சக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் மனப்பாங்கு, நிலா அண்ணாவின் தமிழார்வத்தையும், பற்றையும் பறைச்சாற்றும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நிலா அண்ணா உங்களுக்கு என் பணிவன்பான வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் !

அடுத்து....என் நன்றிக்குரியவர்

தாரள மனத்துடன் எப்பொழுதுமே ஏதோ ஒரு மாற்றத்தை, ஒரு எழுச்சியை தேடிக்கொண்டே இருக்கும் ஒரு இளம் படைப்பாளி இவர். இம்முறைப் போட்டியில் பிரதான அனுசரணையாளராக , முதலாம் கட்ட சிறப்பு நடுவராக பணியாற்றியதுடன் அடிக்கடி ஆலோசனைகளையும் வழங்கி என்னை உற்சாகமூட்டியவர் !

சக படைப்பாளிகளுக்காக பல்வேறு வழிகளில் ஊக்கமளித்து வரும் இவர் தளத்தில் சொற்ப சில மாதங்களிலேயே சிரேஷ்ட படைப்பாளி என்ற நிலைக்கு உயர்ந்து நிற்கின்றார். இந்த போட்டியில் பணப்பரிசில்களை வழங்க முன்வந்துள்ளதுடன், இன்னும் நிறைய திருப்பணிகளைச் செய்வதற்கான உத்தவேகத்துடன் தளத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்.

அவர்...தொழிலதிபர்...என் அன்பு அண்ணன் ராம் வசந்த் அவர்கள் !

ராம் வசந்த் அண்ணா உங்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் !

அண்ணா நிலா மற்றும் ராம்வசந்த் இருவரினதும் நிதி உதவியுடனேயே இந்த போட்டி சிறந்த போட்டியாக எழுச்சி பெற்றுது என்பதனை அனைவருக்கும் அறியத்தருவதில் மன நிறைவடைகின்றேன் !

பணப்பரிசில்களோடு நின்றுவிடாமல் இன்னும் பல படைப்பாளிகளை அடையாளப்படுத்தவேண்டும் என்ற என்னுடைய அடுத்த சிந்தனைக்கு உயிரூட்டியவர் தளத்தின் நிரந்தர கதாநாயகர் !

தன்னலம் அல்ல உடல்நலத்தைக் கூட பாராமல் தமிழுக்கும் தன் உறவுகளுக்கும் சேவையாற்ற ஓடிவரும் இவரது திருப்பணிகளை தளம் கடந்தும் தமிழுலகம் அறிந்தே வைத்திருக்கின்றது என்பதை சொல்லும் போதே அவர் யார் என்பதை பலரும் கணிப்பிட்டிருப்பீர்கள்!

ஆமாம் அவர் எங்கள் எல்லோரினதும் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அய்யா அகன் அவர்கள் தான் !

இந்த போட்டியின் ஆறுதல் பரிசு பெறும் அனைவருக்குமான புத்தக சன்மானங்களை வழங்க முன்வந்ததுடன், இறுதி கட்ட சிறப்பு நடுவராகவும் பணியாற்றினார்.

இறுதி தேர்விற்காக அனுப்பிய பதினைந்து படைப்புகளையும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அய்யாவின் பார்வைக்கு எடுத்துச் சென்று பெரும் பணியாற்றி இருகின்றார். அத்துடன் முனைவர் பா. ரவிக்குமார், பாடலாசிரியர் யுகபாரதி, eluththaஎழுத்தாளர் விழிகள் நடராஜன் போன்ற முன்னணி எழுத்தாளர்களின் இதற்காக உள்வாங்கியிருக்கின்றார் என்பது மிக முக்கிய அம்சமாகும் !

தோழர் அகன் அவர்களே..இந்த குழந்தையின் அன்பு முத்தங்கள் என்றும் போல இன்றும் உங்களுக்காக..கொஞ்சம் சூடாக !

(தற்போதும் உடல்நிலை சற்று சரியில்லாமல் இருக்கும் அகன் அவர்கள் தனது எண்ணங்களை ஒலிப்பதிவு செய்து வழங்கவுள்ளார் என்பதையும் அறிக)

மேற்சொன்ன பெருந்தகைகள் நீங்கலாக இந்த போட்டியினை நடாத்த மிகப்பிரதான உதவிகளைச் செய்த பலர் இருகின்றார்கள். அவர்கள் அனைவருமே என் பேரன்புக்குரிய தோழர்கள்.

பல இடர்களுக்கு மத்தியிலும், இக்காட்டான சூழ்நிலைகள், சிக்கல்களுக்கு மத்தியிலும் என்னுடைய விடுகைக்கு மதிப்பளித்து தங்களது பொன்னான நேரத்தை செலவழித்து சிறப்பு நடுவர்களாக பணியாற்றி, மிக கடினமான முதலாம் இரண்டாம் கட்ட தேர்வுகளைச் செய்து தந்தார்கள் !

இவர்கள் அனைவருமே என மனத்தில் நிலையாய் இடம்பிடித்திருக்கும் எழுத்தாற்றல் மிக்க படைப்பாளிகள். அவர்கள் அனைவரதும் பெயர்களை அறிவித்து நன்றி கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் !

திரு.ஈஸ்வரன் ராஜாமணி
திரு.மெய்யன் நடராஜ்
செல்வி.புலமி அம்பிகா
திரு.சர்னா
திரு.வினோத் கண்ணன்
திருமதி.தாரகை
திரு.ஜோசப் ஜூலியஸ்
திரு.பொள்ளாச்சி அபி

மதிப்பிற்குரிய தோழர்களே, உங்கள் உன்னதமான அர்ப்பணிப்பு மிக்க உதவிக்கும் சேவைக்கும் என்றும் மாறா அன்புடனும், மரியாதை மிகுந்த உளத்துடனும் நன்றி கூறிக் கொள்கிறேன் !

முக்கியமாக தன் தந்தையின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் போதும், வைத்தியசாலைக்கும் வீட்டிற்கும் ஓடிக்கொண்டே என் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து படைப்புகளைத் தெரிவு செய்து கொடுத்த பொள்ளாச்சி அபி அவர்களை நினைத்து நெகிழ்வடைகின்றேன்!

அபி சார் உங்களுக்கு என் அன்பு நன்றிகளைக் கூறிக் கொள்வதுடன் மன்னிப்பையும் கேட்டுக் கொள்கின்றேன்- அந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களை நடுவராக பணியாற்ற அழைத்தமைக்கு !

எல்லாவற்றிகும் மேலாக இப்படி ஒரு போட்டியினை நடாத்த களம் அமைத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல் எல்லா படைப்பாளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பி விளம்பர உதவிகளை செய்து பெரும் பங்காற்றிய எழுத்து தளத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் பெருமையுடன் நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன் !

எழுத்து தளமும் அதன் உறுப்பினர்களும் வேறொரு பரிணாமத்தை நோக்கி நகர எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கின்றேன் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன் !

இப்படி பல துறைகளிலும் இருந்து எனக்கு கிடைத்த ஒத்துழைப்பின் உதவியுடன் 2015ம் ஆண்டின் பொங்கல் கவிதைப் போட்டியினை நடாத்தி, பெருமையுடனும் மகிழ்வுடனும் இந்த நிகழ்வை முடிவுக்கு கொண்டு வருகின்றேன் !

தோழர்களே....
எமது எழுதுகளுக்கென்று ஒரு தனித்துவத்தை உருவாக்கி, நமது சமுதாயத்தையும் சந்ததியினரையும் உய்ர்நிலைக்கு எடுத்துச் செல்ல எழுத்தால் உழைப்போம் என்று கூறிக் கொண்டு இதுவரை என்னுடன் பயணித்து உங்கள் அனைவருக்கும் மனப்பூர்வமாய் நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன் !

நன்றி
என்றும் அன்புடன்
கே.எஸ்.கலை

எழுதியவர் : கே.எஸ்.கலை (31-Jan-15, 10:24 pm)
பார்வை : 938

மேலே