வண்ணக் கோலமென்றே நினைத்தேன்
வண்ணக் கோலமென்றே நினைத்தேன்
வகைகளின் கோர்வையென உணர்ந்தேன் !
மலர்களின் வேலிக்குள்ளே பலபொருட்கள்
உற்றுநோக்கியே அறிந்தேன் அவைகளை !
சோப்பு சீப்பு கண்ணாடி அடுக்கடுக்காய்
பொட்டும் வளையல்களும் வரிசையாய் !
வாசனை திரவியமும் இங்கே கூடுதலாய்
வசீகரம் மேலோங்க குங்கும சிமிழ்களுமாய் !
வண்ணமிகு கோலமானது தரையில்தான்
திட்டத்தை தீட்டியவரின் எண்ணம்தான் !
வாழ்த்துக்கள் வரைந்திட்ட கரங்களுக்கும்
வாழ்த்திடுங்கள் புரிந்திட்ட நெஞ்சங்களும் !
( இப்படத்தை எனக்கு அலைபேசி மூலம்
அனுப்பியவர் என் இனிய நண்பர் இயக்குனர் திரு விசு
அவர்களின் துணைவியார் )
பழனி குமார்