நன்றி நன்றி நன்றி

அனைவருக்கும் வணக்கம் !
பொங்கல் கவிதைப் போட்டி -2015 என்ற கவிதைத் திருவிழா கோலாகலமாய் நடந்து முடிந்தது . இத்திருவிழாவை சிறப்பாய் வடிவமைத்து, வழிநடத்தி வெற்றி விழாவாக்கிய அன்பு மகன் கலைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...! போட்டியில் பங்கேற்று கவிதைத் திருவிழாவை சிறப்பித்த எழுத்துச் சொந்தங்கள் , நட்புகள் அனைவருக்கும் இதயப் பூர்வமான வாழ்த்துக்கள் !

நடுவர்களாக தம் பங்கினைச் செவ்வனேயாற்றிய திரு. நிலா சூரியன் , திரு. மெய்யன் நடராஜ் , திரு. சர்னா , திரு . ஈஸ்வரன் ராஜாமணி, செல்வி . புலமி அம்பிகா , திரு. ஜோசப் ஜூலியஸ் , திரு .பொள்ளாச்சி அபி, திரு.ராம் வசந்த், முனைவர் வினோத் கண்ணன் , திருமதி தாரகை ....அனைவருக்கும் நன்றிகள் . நடுவர்களின் அனுபவப் பகிர்வுடன் கூடிய அறிவுரைகள் வளரும் கவிஞர்களுக்கு வரப்பிரசாதம் . நானும் ஒவ்வொருவர் கருத்தையும் உள்வாங்கி அதனைப் பின்பற்றுவேன் .

ஒவ்வொரு படியாக அலசி ஆராயப்பட்டு தேர்வு நடைபெற்று பின்னர் , தன்னலமில்லா பணியில் தன்னிகரற்று விளங்கும் திரு .அகன் ஐயா அவர்களுடன் சிறப்பு நடுவர்களாய்ப் செயல்பட்ட மகாகவி .ஈரோடு தமிழன்பன் ஐயா , திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி , முனைவர் .பா. ரவிக்குமார் , விழிகள் நடராசன் ஆகியோர் வெற்றியாளர்களை தெரிவு செய்துள்ளார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ! நம் கவிக்குழந்தைகள் இவர்கள் கைகளில் தவழ நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . சிறப்பு நடுவர் குழுவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் , நன்றிகளும் !

பொங்கல் கவிதைப் போட்டியில் மூன்று தலைப்புகளிலுமாக ஆறுதல் பரிசுகள் வென்ற தசமணிகள்
1. 228676 - vivekbarathi (இ)
2. 229198 - உமை (சா)
3. 228283 - saravanaa (நா)
4. 229317 - ரோஷான் ஏ.ஜிப்ரி (இ)
5. 228341 - மணியன் (இ)
6. 227954 - இராஜ்குமார் Ycantu (இ)
7. 227691 - Sujay Raghu (நா)
8. 227998 - இணுவை லெனின் (சா)
9. 229102 – யாழ்மொழி (சா)
10. 227705 - ஜாக்.ஜி.ஜெ (சா)
எல்லோருக்கும் என் மனப்பூர்வமான பாராட்டுகளையும் , வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

மூன்று தலைப்புகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நவரத்தினங்கள்
===========================
சாதி ஒழி! மதம் அழி! சாதி!

• முதல் பரிசு – கவிதாசபாபதி 227828 – 1500 ரூபாய்
• இரண்டாம் பரிசு – சீதளாதேவி 228963 - 1000 ரூபாய்
• மூன்றாம் பரிசு - ராதா முரளி 228340 – 500 ரூபாய்
============================
இப்படி நாம் காதலிப்போம்

• முதல் பரிசு - எசேக்கியல் காளியப்பன் – 228882 - 1500 ரூபாய்
• இரண்டாம் பரிசு – கிரிகாசன் – 229119 - 1000 ரூபாய்
• மூன்றாம் பரிசு – குமரேசன் கிருஷ்ணன் – 228498 - 500 ரூபாய்
============================
நாளைய தமிழும் தமிழரும்

• முதல் பரிசு – ஜின்னா – 228145 - 1500 ரூபாய்
• இரண்டாம் பரிசு – மீ.மணிகண்டன் – 228766 - 1000 ரூபாய்
• மூன்றாம் பரிசு – கருமலைத்தமிழாழன் – 228356 - 500 ரூபாய்
அனைவருக்கும் நிறைந்த மனதுடன் என் வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன் .

இத்தருணத்தில் என்னையும் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறக்க வைத்த இனிய செய்தியை திரு. அகன் ஐயா அவர்கள் மூலம் அறிந்தேன் .
மதிப்பிற்குரிய ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்களால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டேன் என்பதை அறிந்தபோது என் உணர்வலைகளை எழுத்தில் வடிக்க முடியவில்லை ....என் பாக்கியமாக இந்த வாய்ப்பினைக் கருதுகிறேன்.

இதற்கு வித்திட்ட எழுத்து தளத்திற்கும் , பொங்கல் போட்டி அமைப்பாளர்களுக்கும் , நடுவர்களுக்கும் , சிறப்பு நடுவர்களுக்கும் ...என் இதயப்பூர்வமான நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன் .

வெண்பாவால் கிடைத்த விருது என்பதால் .... எனக்கு வெண்பா ஆசையை மனதில் விதைத்த குட்டி பாரதி விவேக் பாரதிக்கும் , அன்பிற்குரிய ஆசான் காளியப்பன் எசேக்கியல் ஐயா அவர்களுக்கும் , மருத்துவர் கன்னியப்பன் ஐயா அவர்களுக்கும் , மென்மேலும் வெண்பா எழுத உற்சாகமூட்டும் திரு . சங்கரன் ஐயா அவர்களுக்கும் , திரு. ராஜமாணிக்கம் அண்ணா அவர்களுக்கும் , திரு. அகன் ஐயா அவர்களுக்கும் , வெண்பா எழுதினால் கருத்துக்களால் உற்சாகமூட்டும் திரு . மெய்யன் நடராஜ் , மலேசியா அபி , நண்பர் பழனி குமார் , அன்பிற்கினிய தோழி சாந்தி மற்றும் எழுத்து தளத்தின் என் செல்லப் பிள்ளைகள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி .

இத்தருணத்தில் திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி விருது பெரும் அன்பு மகன் ஜின்னாவுக்கு அம்மாவின் ( ரசிகையின் ) அன்பான வாழ்த்துக்கள் !! வெற்றிப்பயணம் தொடரட்டும் ....!!
போட்டியை மிக அற்புதமாய் நடத்திய விழாக்குழுவினருக்கு எல்லோர் சார்பிலும் வாழ்த்துக்கள் ! தமிழ்ப் பணி தொடரட்டும் ....சிறக்கட்டும் ....!!
வாழ்க வளமுடன் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Jan-15, 11:38 pm)
பார்வை : 165

மேலே