தாய் நெஞ்சம்
ஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பயணம் செய்தனர்.சிறிது தூரத்தில் ஒரு பெண் இரத்தக் காயங்களுடன் தங்கள் காரை நோக்கி ஓடி வருவதை பார்த்தனர்.
உடனே மனைவி காரை நிறுத்தாமல் செல்லுங்கள் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும் என்று எச்சரித்தாள்.
ஆனால் அவள் கணவரோ வண்டியின் வேகத்தை குறைத்து அந்த பெண்ணிடம் என்ன நடந்தது என்று கேட்டார். நாங்கள் வந்த கார் விபத்து ஏற்பட்டு அங்கே நிற்கிறது, என் கணவர் விபத்தில் இறந்துவிட்டார் என் குழந்தை உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறது .தயவு செய்து என் குழந்தையை காப்பாற்றுங்கள் என்று கதறினாள்.
அவரும் இறங்கி சென்று விபத்துக்குள்ளான காரை பார்த்தார்.முன் சீட்டில் ஒரு பெண்ணும் அவள் கணவரும் இறந்து கிடந்தனர் பின் சீட்டை பார்த்தார் அங்கு ஒரு குழந்தை அடிப்பட்டு மயக்கத்தில் கிடந்தது.
உடனடியாக அந்த குழந்தையை எடுத்து கொண்டு தன் காரை நோக்கி ஓடினார், குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்து விட்டு தன்னிடம் உதவி கேட்ட பெண் எங்கே என்று தேடினார்.
எங்கும் காணாததால் விபத்துகுள்ளான காரை நோக்கி சென்றார்.காரில் இறந்து கிடந்த ஒருவரையும் அவருக்கு அடுத்த சீட்டில் சீட் பெல்ட் மாட்டியபடி இறந்து கிடந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தன்னிடம் சற்று முன் தன் குழந்தையை காப்பாற்றும்படி உதவிகேட்ட அதே பெண் தான் அவள்.
அன்னை என்பவள் தான் இருந்தாலும் இறந்தாலும் குழந்தையின் வாழ்வுக்காகவே வாழ்பவள். அன்னையைவிட சிறந்த தெய்வத்தை வேறு எங்கும் காண முடியாது.
*****************************************************************************
உங்கள் கண் சிறிதளவு கலங்கினாலும் ஷேர் செய்து விடுங்கள்.