சிறுவர் பாடல் _உணவில் கவனம் கொள்
நேரத்துடனே சாப்பிட்டால்
நீண்ட ஆயுள் அடைந்திடுவோம்
எண்ணையில் பொறித்த பண்டங்கள்
சோம்பி இருந்திட வழி செய்யும்
அளவாய் நீயும் உண்டு மகிழ்
பெருந்தீனியை என்றும் தவிர்
கொழுப்பை சேர்த்திடும் மேல்தீனி
விரும்பி உண்டால் ஊளைச்சதை
பழங்கள் பச்சை காய் கனிகள்
உடலினை நன்கு உறுதி செய்யும்
அரிசியும் பருப்புடன் நவதானியம்
சேர்த்து உண்டால் நூறாயுள்!!!