உயிர்களிடம் அன்பு செய் _சிறுவர் பாடல்
துள்ளிக்குதிக்கும் கன்றுகுட்டி
வாலைக்குழைக்கும் நாய்க்குட்டி
புலியின் நிறத்தில் பூனைக்குட்டி
அனைத்தும் உண்டு எங்கள் வீட்டில் ...
பள்ளி சென்று வந்ததுமே
கண் காணும் மீன்தொட்டி
சோம்பி கிடைந்து துயிலாமல்
அன்பாய் பழக பல்லுயிர்கள்
உயிர்களிடத்தில் அன்பு செய்வோம்
பாசமாய் இருந்து பண்பு காப்போம்
துன்பம் எதுவும் தராமல்
வாழ்கையில் வளம் சேர்ப்போம் !!!