ஆதலினால் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

உயிர்பூக்கள் மலர்ந்திட உருபெற்ற உணர்விது
உயர்பூக்களாய் வளர்கையில் மணம் கொடுக்க வலியது
உதிர்கின்ற வலியிலும் சுகம் கொடுக்கும் வழியிது
உடல் மறைந்து போயினும் நிலைக்க இடம்பிடிக்கும் செயலிது

சாதிதன்னை தூக்கியே சாக்கடையில் எறிவது
சாதியென்று உன்னையே சிகரமேற வைப்பது
மதபேதம் இன்றியே மனதை மட்டும் பார்ப்பது
மதம்பிடித்த செடியிலும் மனிதம் பூக்க செய்வது

கருவிலுன்னை சுமக்கையில் தாயுள் தோன்றும் குணமிது
வளருமுன்னை பார்க்கையில் தகப்பன் கொள்ளும் மகிழ்விது
கோபமோடு அவளடிக்கையில் தங்கையென பொறுப்பது
சாயும் நேரம் வருகையில் உறவை தோள் கொடுக்க வைப்பது

இரத்தம் சிந்த பார்க்கையில் இரக்கம் என்று வருவது
யுத்தம் எனும் போதிலோ வீரம் என்னும் பெயரிது
பிச்சை கேட்கும் மழலை மேல் பரிவு என்று யெழுமிது
பச்சை வயல் பார்க்கையில் மனதை பறிக்கும் அழகிது

அன்னை என்று ஒருவரை (தெரசா) இன்றும் சொல்ல வைத்தது
அன்பு என்ற ஒன்றையே ஆணிவேராய் கொண்டது
அக்காதல்தானே உலகிலே கடவுளையும் தைத்தது
ஆதலினால் காதல் செய்வீர்

எழுதியவர் : கவியரசன் (2-Feb-15, 3:00 pm)
பார்வை : 104

மேலே