நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி
ஜரேப்பா கண்டம் முதல் அமெரிக்கா தேசம் வரை
வியத்து பார்க்கும் தேசம் தானே நம் இந்தியதேசம்.....
விவசாயத்திலும்
விஞ்ஞனத்திலும் முதல் இடம்
நம் தேசம் தானே...........
முழத்துக்கு முழம் குப்பைதெட்டிகள் இருந்தும்
எதிர் வீட்டு வாசலிலே வீசி ஏறியும் பழக்கம் எதற்க்கு.....
பட்ட படிப்பு முடித்தவுடன்
வெளிநாட்டு கனவுகள் எதற்கு ..
.உன் அறிவை விற்பனை செய்யாதே
வெளிநாட்டிடம்....
பட்டினியால் பல உயிர்கள் வாசலிலே
தவித்திருக்க
இறைவனுக்கு பால் அபிசேகம் எதற்க்கு ..
பெண்ணுக்கு கோவில்களும்
இங்கே தான்....
கள்ளிபாலும் இங்கே தான்
பொது இடத்தில்
எச்சில் துப்புவதும்
புகையிலை பிடிப்பதுவும்
மலசலம் கழிப்பதுவும்
சுற்று சுழலுக்கு கொடுதியென்று
அறிந்தும் நாம் ஏன் விடுவதில்லை.....
இது நம் தேசம் இல்லை
நம் வீடு என்று
ஏன் நினைப்பதில்லை ....
தேயிலையும் ரப்பரும்
தனியங்களும் வாசனை திரவியங்களும்
அயல்நாடு சென்றாலும்
நம் நாட்டின் பெருமை சொல்லும்
இருந்தும் அன்னிய வாழ்க்கைக்கு
அடிமையாகி அலைவது ஏன்....
மூலிகை மருந்துவமும்
சங்ககால இலக்கியமும் தொன்மையான ஆலயங்களும் ஆலையங்களும்
நம் தேசத்தின் பெருமை செல்லும்
இனம் மொழி மதம் பேதம் தாண்டி
ஒற்றுமையாய் வாழ் ...
நம்
சுகத்திரத்தை அன்னிய மண்ணிடம்
அடிமையாக்கி விடாதே………..