எது கவிதை

எதுகை மோனைக்கு
வார்த்தைகளின் மோதல்..

இயற்கைக்கு அப்பால்
தொடங்கும் தேடல்..

எழுத நினைத்த
உரைநடையில்
இரு இரு வரிகளின் பிரிப்பு ..

புன்பட்ட நெஞ்சங்களின்
புதுமையான புலம்பல்..

எள்ளி நகையாடும்
சமூகத்திற்கான சாடல்..

உணர்சிகளுக்கான உருவம்..

பயண நினைவுகளின் பதிப்பு..

பருவ நினைவுகளின் பாதிப்பு..

என
உள்ள நினைவுகளை
உவமை கொஞ்சம்,
உண்மை கொஞ்சம்,
எதுகை கொஞ்சம்
கவிநடை கொஞ்சம்

ஆக
கவி தொடுத்த
கதம்பம் தான் கவிதையோ..!!!!!!!!

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (6-Feb-15, 12:47 pm)
Tanglish : ethu kavithai
பார்வை : 44

மேலே