தேவை ஒரு காடு

துரத்தி வரும்
பாதங்களைக் கடந்து
ஒளிந்து கொள்ள
இடம் தேடும் கண்கள்...


என்
சதைத் துகள்களுக்குள்
சிக்கிக் கொண்ட
ஒரு துளி ரத்தம்...


என் முகம்
காட்ட மறுத்து
நொறுங்கிப் போன
அந்தக் கண்ணாடிப் பூக்கள்...


உள்ளங்கை சுமந்திருந்த
சிறு விளக்கில்
கருகிப் போன
ஒற்றைப் பூவிதழ்...


என்
அம்புகள் கிழித்து
அறுந்து கிடந்த
சிலந்தி வலை...


பாம்புகளென்று தெரியாமல்
சிறு மின்மினி
ஒளிந்து கொண்ட
பச்சை வேர்கள்...


எனைத்
துரத்தி வரும்
பாதங்களைக் கடந்து
நான்
ஒளிந்துகொள்ள , தேவை
இன்னுமொரு காடு...
- கிருத்திகா தாஸ்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (6-Feb-15, 3:40 pm)
Tanglish : thevai oru kaadu
பார்வை : 148

புதிய படைப்புகள்

மேலே