நெஞ்சு பொறுக்குதில்லையே -மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
இப்பாரினில் கூற புதிதாய் எதுவுமில்லை
இங்கு நடப்பதை கண்டால் ஊமை போல்
இருக்கவும் என் நெஞ்சு பொறுக்கவில்லை
எத்தனை எத்தனை அநீதிகள் இங்கே
கல்வியால் உரிமையை கற்றுகொடுத்து
நடைமுறையில் அடங்கி போகசொல்லும் கல்விக்கூடங்கள்!
சுதந்திரமாய் பேசு என்று அறிவிப்பு விடுத்து
கழுத்தின் மேல் கத்தி வைக்கும் கொடுமைகள் !
பணத்தால் என் உரிமைகளை விலைக்கு
வாங்கும் கோரர்கள்-பெண்கள் நாட்டின்
கண்கள் எனக் கூறி கண்களாலேயே
உடலை கற்பழிக்கும் காமகர்கள்!
என் நெஞ்சம் கொதிக்கிறது- மக்கள்
குறை தீர்க்கும் நியாயகூடங்கள் கூட
அநியாயர்களுக்கு அடங்கி போகும் அவலங்கள்
பொறுக்கமுடியவில்லை , சகிக்கதெரியவில்லை!
இதுதான் உலகின் நியாயம் என்று தெரிந்திருந்தால்
கருவிலேயே கலைந்திருப்பேனே - என்
கொதிப்புகளுக்கெல்லாம் முற்றுபுள்ளி கண்ணீர்தானே
இருந்தும் என் நெஞ்சம் பொறுக்குதில்லையே!