கிராம விடியல்

"கிராம விடியல்"

பனியை தாங்கும் பூவின் பளுவை விலக்க விரையும் ஆதவன்....


செங்கதிரோன் வரவை பறைசாற்றிச் செல்லும் கொண்டை சேவலின் கொக்கரிப்பு ...


கழனி செல்லும் அவசரத்தில் உலையில் கொதிக்கும் கம்பஞ்சோறு மணம்...


ஏர்கலன் ஏந்தி செல்லும் உழவனுக்கு ஏக்கத்துடன் விடை தரும் ஏகாந்த நிலவு...


யாசகம் தேடி வந்தவனை வெறுங்கையுடன் அனுப்பிவிட்டு காக்கைக்கு படையல் உபசரணை....


காலை பசிக்கு மோருடன் காத்திருக்கும் பழைய சோறும் பச்சை மிளகாயும்...


மங்கையவள் குழல் சேர செய்த தவத்தின் பலனாய் மணக்கும் மல்லிகை...


மனையாள் வருவாள் என எதிர்நோக்கி கண் பூத்த அரசமரத்தடி பிள்ளையார்...


இவையனைத்தும் கண்டேன் கற்பனைதனில்...

எழுதியவர் : Monisha (6-Feb-15, 6:46 pm)
சேர்த்தது : மோனிஷா
Tanglish : kiraama vidiyal
பார்வை : 80

மேலே