மோனிஷா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மோனிஷா
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  03-Apr-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Dec-2014
பார்த்தவர்கள்:  163
புள்ளி:  24

என்னைப் பற்றி...

கவிக்கனியை ருசிக்கும் ரசிகை நான்

என் படைப்புகள்
மோனிஷா செய்திகள்
மோனிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2018 6:50 pm

நான் முதன்முதலில் எழுதிய கவிதை போல் என் அத்தனை சிறுபிள்ளைத்தனமும் மொத்தமாய் ஒளித்துக்கொண்டு நினைத்தாலே பேரின்பம் தருகிறான் அவன்...

மேலும்

மோனிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2016 10:30 pm

விரும்பி கேட்ட பாடல்
வரிகள் காதுமடல் கடக்க
விழிகள் விரிய காதல்
கொள்கிறேன்

படித்ததில் பிடித்தது
நினைவில் எட்ட
இதழை எட்டிய நகையில்
காதல் கொள்கிறேன்

தணலில் தவழும் நிலவு
இரவை தழுவி கூடல் கொள்ள
உறக்கத்தோடு ஊடலாய் காதல்
கொள்கிறேன்

நம்பிக்கை உடைந்து விழ
உள்ளம் உதிர்க்கும் உதிரம் அழைக்க
உதவிக்கு வரும் விழிநீரோடு
காதல் கொள்கிறேன்

இடரி விழுந்துவிட்ட தருணம்
அனிச்சையாய் அணைக்கும்
தோழனின் கனிந்த கரங்களோடு
காதல் கொள்கிறேன்

உதிரும் போதும் உதிரா
புன்னகை சூடி கார்குழலில்
கர்வமாய் வீற்றிருக்கும் பூவரசோடு
காதல் கொள்கிறேன்

இரை தேடி இரைப்பை
இரைக்க வளியோடு

மேலும்

சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Feb-2016 9:49 am
மோனிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2016 11:37 pm

உயிரில்லா பொம்மையின்
அழுகையில் தவித்திடும்
மழலையின் தாய்மை
அழகு

உரிமைகொண்ட
பெண்மையிடத்திலும்
அனுமதி வேண்டி நிற்கும்
ஆண்மை அழகு

வேதனை கூச்சலிட
அருகில் மௌனமாய்
தொடர்ந்திடும் நட்பின்
புரிதல் அழகு

இன்னல் துடைத்தவரை
நன்றியாய் தொழுதிட
அவர் அருளும் புன்னகை
அழகு

பிள்ளையின் பொய்யான
வலியில் துடித்திடும்
தந்தையர்தம் மடமை
அழகு

உலகளவு தெரிந்தவரை
கடுகளவில் வென்றுவிடும்
மழலையர்தம் சிந்தை
அழகு

துன்பம் இழைத்தவனுக்கும்
வசை சொல்லிட தெரியாத
அப்பாவியான வெள்ளைமனம்
அழகு

மேலும்

மோனிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2016 1:01 am

கண்ணீர் தொட்டு
கண்களை துடைத்தும்
கானலில் தெளியாத
சில
தீர்வுகள்

தெளிந்த பாலென
கிடைத்தும்
குழப்பத்தில் தட்டிவிட்ட
சில
தீர்வுகள்


நொந்து துவண்டிடும்
முன் கொடியை
தாங்கும் மரமென
வரமாய் பெற்ற
சில
தீர்வுகள்


மதியின் விலை
மலிந்த பின்
விதியிடம் விடப்படும்
சில
தீர்வுகள்

சுவாசம் விட்டு
ஆசுவாசம் செய்தும்
தும்மல் வந்து
இடைமறித்து
திசை மாறிய
சில
தீர்வுகள்


தேடி தேடி தேடலினூடே
தேர்ந்தெடுக்குமுன்னே
கையில் தினித்த
சில
தீர்வுகள்

வாழ்வை நிச்சயிக்கும்
தீர்வுகள்
வாழ்க்கை நிச்சயத்து
விட்ட தீர்வுகள்
பாடம் சொல்லி சென்ற
தீர்வுகள்
பாசம்

மேலும்

மிகவும் சிறப்பு 11-Jan-2016 2:33 pm
மோனிஷா - அஞ்சா அரிமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2015 4:07 pm

யாரோ யான்...?

தாளகதியோடு தவழ்ந்து நீரோடும்
நீளநதியூடே நகரும் சிறுகல்லோ...?
துயரந்தனை மறந்து தூயவானூடே
உயரப் பறந்தாடும் அரும்புள்ளோ...?

மேலும்

மோனிஷா - மோனிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2015 7:55 am

மாலை பொழுதின் மந்தாரத்தில்
வானிலும் ஏதோ கூட்டம்
மனதை திருடிச் செல்லும்
பொல்லாத பறவைகள் பேரணி


ஆசை தீர அணைக்கும்
காற்றோடு என்ன கோபமோ...
சொந்தங்களோடு சல்லாபம் செய்கிறது
சிறகுகள் வலிக்க போராட்டமோ...!


களஞ்சியத்தில் சிதறிய நெல்மணியாய்...
சோலை நிறைந்த புஷ்பங்களாய்...
தாடகத்தை ஆளும் ஆம்பலாய்...
முகிலில் பதிந்த புட்கள்...!


மேகங்களில் மறைந்த பிறைமதியென
சிறகடித்த கல்லூரிகாலம் மறைந்திட...
நினைவை கலைத்த களிப்பில்
கூக்குரலிட்டு போகுது புள்ளினம்...!


சிட்டுக்குருவி தேன் சிதறிட
சிறகென விரிந்தது சிந்தை...
அன்றில் இனமாய் மனம்
காற்றோடு காதல் கொண்டது...!

மேலும்

மன்னிக்கவும் சகோ @அஜீத்...பிழைகளை திருத்திக் கொள்கிறேன் 28-Feb-2015 1:58 pm
மிக அருமை படித்தேன் ரசித்தேன் அழகான வரிகள் நட்பே!ரொம்ம நல்லாயிருக்கு 28-Feb-2015 1:20 pm
நல்ல வரிகள் தோழரே . 28-Feb-2015 1:14 pm
நல்ல வரிகள் !! எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் படித்து முடித்து பின் பதிக்கலாமே !! தொடர்ந்து எழுதவும் !! 28-Feb-2015 11:21 am
மோனிஷா - கவிக்கண்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2015 9:55 am

மனிதர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது?

மேலும்

ஓகே நண்பரே 18-Feb-2015 1:56 pm
உண்மைதான்... நன்றி தோழரே!!!!! 15-Feb-2015 9:51 pm
கொட்டிய வார்த்தையை அல்ல முடியாது கருவறை வாடகையை அடைக்க முடியாது இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது மரணத்தை யாரும் வெல்ல முடியாது ........ 15-Feb-2015 3:19 pm
உண்மைதான்... நன்றி தோழரே!!!!! 12-Feb-2015 10:07 am
மோனிஷா - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2015 3:09 pm

நீ..
நீயாகவே
இருந்து கொள் ..
நான் ..
நானாகவே ..
இருக்கிறேன்..
அவர்களை பொறுத்த வரை!
இந்து மகா சமுத்திரமும் -
அட்லாண்டிக் பெருங் கடலும்
சந்திக்கும் இடம் போல..
நிறம் மாறியே தெரிவோம்
தனித்தனியாய் ..
அவர்கள் கண்களுக்கு..
நீ..வேறு
நான்..வேறு
ஆனாலும்
ஒன்று!

மேலும்

மிக்க நன்றி நட்பே 07-Feb-2015 10:21 pm
அருமை அருமை ...... 07-Feb-2015 9:50 pm
மிக்க நன்றி நட்பே! 07-Feb-2015 1:17 pm
கவி மிகவும் அருமை தோழமையே..! 07-Feb-2015 12:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

அஞ்சா அரிமா

அஞ்சா அரிமா

பாளையங்கோட்டை (கடலூர்)
vinovino

vinovino

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (4)

அஞ்சா அரிமா

அஞ்சா அரிமா

பாளையங்கோட்டை (கடலூர்)
vinovino

vinovino

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே