அழகு
உயிரில்லா பொம்மையின்
அழுகையில் தவித்திடும்
மழலையின் தாய்மை
அழகு
உரிமைகொண்ட
பெண்மையிடத்திலும்
அனுமதி வேண்டி நிற்கும்
ஆண்மை அழகு
வேதனை கூச்சலிட
அருகில் மௌனமாய்
தொடர்ந்திடும் நட்பின்
புரிதல் அழகு
இன்னல் துடைத்தவரை
நன்றியாய் தொழுதிட
அவர் அருளும் புன்னகை
அழகு
பிள்ளையின் பொய்யான
வலியில் துடித்திடும்
தந்தையர்தம் மடமை
அழகு
உலகளவு தெரிந்தவரை
கடுகளவில் வென்றுவிடும்
மழலையர்தம் சிந்தை
அழகு
துன்பம் இழைத்தவனுக்கும்
வசை சொல்லிட தெரியாத
அப்பாவியான வெள்ளைமனம்
அழகு

