வெற்றிகள் எல்லாம்

வெற்றிகள் எல்லாம் !

நீலவானத்தின்
நீள்பரப்பினிலே
சுதந்திரமாய் பறப்பதே
பறவைகளின் இயல்பு
பறவைகளை….
சுட்டுவீழ்த்துவதே
மனிதத்தின் இயல்பு!
சுட்டு வீழ்த்துவதால்
சுதந்திரமாய் பறப்பதை
நிறுத்தவா போகின்றன!
பறவைகள் !

அழகான குளத்தினிலே
தாமரைகள் பூத்திருக்க
தண்ணீர; அதனில்
துள்ளி பாய்வதே
மீன்களின் இயல்பு
மீன்களுக்கு….
தூண்டிலிடுவது
மனிதத்தின் இயல்பு!
தூண்டில் இடுவதால்
துள்ளி பாய்வதை
நிறுத்தவா போகின்றன
குளத்து மீன்கள்! !

பூங்காவினுள்…
பூத்து இருப்பதே
பூக்களின் இயல்பு
பறிப்பதென்பது
மனிதத்தின் இயல்பு !
பறிப்பதாலே… மறுநாளில்
நிறுத்தவா போகின்றன
பூங்காவின் பூக்கள் !

என்றென்றும் நிறுத்தா
இயற்கை நிகழ்வுகள்
இனிதே நடந்திட….
துவளுவதேன் தோழா!
தடைகளை தகர்த்தெறி
தடயங்களை பதித்திடு!
தோல்விகள் எல்லாம்
தொலைந்து போகும் !
வெற்றிகள் எல்லாம்
தோழமையாகுமே !

----- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (27-Jan-16, 9:07 pm)
Tanglish : vetrigal ellam
பார்வை : 969

மேலே