அஞ்சா அரிமா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அஞ்சா அரிமா |
இடம் | : பாளையங்கோட்டை (கடலூர்) |
பிறந்த தேதி | : 24-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 324 |
புள்ளி | : 86 |
கவிவனத்தில் துளிராக விழையும் விதை..!
அருகே வா வா ஆத்ம தோழா..!
அபலை நெஞ்சின் அன்பும் பாழா..?
காதல் வலியில் வேகுற நானே...
காதற்கிலியில் சாகிற மீனே..!
காக்கை போலே கரைந்திடவா..?- நேசா
யாக்கைக்குள்ளே மறைத்திடவா..?
அருகே வா வா ஆத்ம தோழா..!
அபலை நெஞ்சின் அன்பும் பாழா..?
வெட்டுபற்கள் தன் விரதம் முறிக்காதா..?- என்
கோரைப்பல்லும் கூட கொள்கை மறக்காதா..?
கன்னியின் கண்களும் கற்பினை துறக்காதா..?
காதலை உமிழ்ந்து காற்றிலே பறக்காதா.?
அருகே வா வா ஆத்ம தோழா..!
அபலை நெஞ்சின் அன்பும் பாழா..?
நிழலென ஒன்றவா நெருப்பினை எரித்தே ..!
விழியால் நிரப்பவா வித்தகன் விழியை ..!
விரல்கொண்டு கோதவா காதலன் குழலை ..!
சத்தமிட சொ
ஐயனே பாரதி,,!
அக்னிக் குஞ்சொன்று கண்டாயோ நீ..??
ஐயகோ..! எங்ஙனம் விளம்புகேன் யான்
அக்னியில் சிக்குண்ட குஞ்சென்று அதனை..!
சிறகை ‘நீட்’டியே பறந்து
சிகரம் நோக்கிய பருந்து..!
கருகி வீழ்ந்தது தரையிலே..!
கனவுகள் மிதந்தது நுரையிலே..!
கருகிய சிறகின் சாம்பல்
திருநீறு ஆகிட வேண்டாம்..!
உரமாய் மாறிட வேண்டும்..!
உயிரே.! மரமாய் உருபெற வேண்டும்..!
'நீட்'டிய கரங்கள்- முகத்தில்
தீட்டிய வண்ணம் கருப்புதான்..!
நாட்டிய அரக்கனிடம்
மாட்டிய மந்தைகள்..!
பூட்டிய கோட்டைக்குள்
ஈட்டிய செல்வங்கள்..!
சூட்டிய பெயர்கள்..!
காட்டிய படங்கள்..!
யாவுமே கருப்புதான்..!- சிலவை
காவிக்கு துணையும் கூட..!
அருகே வா வா ஆத்ம தோழா..!
அபலை நெஞ்சின் அன்பும் பாழா..?
காதல் வலியில் வேகுற நானே...
காதற்கிலியில் சாகிற மீனே..!
காக்கை போலே கரைந்திடவா..?- நேசா
யாக்கைக்குள்ளே மறைத்திடவா..?
அருகே வா வா ஆத்ம தோழா..!
அபலை நெஞ்சின் அன்பும் பாழா..?
வெட்டுபற்கள் தன் விரதம் முறிக்காதா..?- என்
கோரைப்பல்லும் கூட கொள்கை மறக்காதா..?
கன்னியின் கண்களும் கற்பினை துறக்காதா..?
காதலை உமிழ்ந்து காற்றிலே பறக்காதா.?
அருகே வா வா ஆத்ம தோழா..!
அபலை நெஞ்சின் அன்பும் பாழா..?
நிழலென ஒன்றவா நெருப்பினை எரித்தே ..!
விழியால் நிரப்பவா வித்தகன் விழியை ..!
விரல்கொண்டு கோதவா காதலன் குழலை ..!
சத்தமிட சொ
பூவிதழ் தவழும்
பனித்துளி காண்..!
மலரோ பனியோ
மாசுறா தான்..!
புனிதமா நட்பினில்
பூவது நான்..!
புதினமாய் எழுதிடும்
அனிலமும் தான்.!
இமையின் அசைவிலே
இசை மழையே..!
இச்சைக்கு இங்கே
இடமில்லையே ..!
வசைச் சொல்கூட
வலுவில்லையே..!
திசையாவும் நட்பின்
தீந்தேன் மழையே..!
புனலே எழிலே
புவியோன் துணையே..!
மலரின் உயிரில்
மதுவாய் நீதான்..!
கயலின் களியின்
காரணம் நீதான்..!
மணலின் உள்ளே
உயிரும் நீதான்..!
வயலின் வாழ்வின்
வசந்தம் நீதான்..!
புயலின் பின்னே
புதிரும் நீதான்..!
முகிலின் கருவில்
மழலை நீதான்..!
அகிலம் தேடும்
அழகி நீதான்..!
இரவில் உறங்கா
இரைகடல் நீதான்..!
கருவில் உயிரின்
கவசம் நீதான்..!
காதலர் விழியின்
கவிதை நீதான்..!
பாலகர் பருகும்
பாலது நீதான்..!
நீதான் நீதான்
நித்தம் நிலவில்
நீசர் தேடும்
நீரது நீதான்..!
நாடுகள் தேடும்
சீதையே நீர்தான்
நாடக உலகில்
ராமனும் யார்தான்..?
மரபிழந்த தமிழர்தம்
மாண்புயர மனங்கொண்டு
மரபுக்கவியும் மாரீசனாய்
மாற்றுருதான் கொண்டு
குரவுகமழ் புதுக்கவியென
குவலயம் வந்ததே..!
கரந்தை மலரன்ன
கலந்த வண்ணம்
விரவிடும் வளிபோல்
விசித்திர கவி மேல்..!
புறவின் செறிவும்
பூவின் கவினும்
அரவின் நஞ்சும்
அபலையின் நெஞ்சும்
திறனின் தாகமும்
தவிப்பின் வேகமும்
பரவியே வீறிடும்
பாரதியின் பரிசிடம்..!
வெள்ளை கந்தை - வேடம்
மறந்த விந்தை..!
அணையும் ஆலையும் - கல்வி
ஆரம்ப சாலையும்
சத்துணவு உலையும் – கீர்த்தி
சத்தமிட்டு அலையும்...!
“கருத்த மேனி – இவன்
கல்லா ஞானி...
கல்வி ஈந்த ஈசன் – இவன்
காமனுக்கும் ராசன்” என்றே..!
கவிதை விற்பவன்
**************************
வார்த்தைகளின் பூட்டினைத்
திறந்து
வைகறையின் விளிம்புகள் ஊடே
இளங்காற்றில் ஓர் இலையைப்போல
கனமற்றவர்களாய்
சிட்டுக்குருவியினொரு
சிற்றிறகினைப்போல
மிருதுவாய்ச் செல்லுங்கள் ....
சொற்களினிதழ் விரித்து
வண்ணத்துப் பூச்சியின்
தேனுரி குழாய்கள் போல்
ரசனையின் தேனுரிய
மெல்ல நுழையுங்கள்
அதிவேகம்
தளரும் விரைவில்
மெதுவாகச் செல்லுங்கள்
இயக்கமே அற்றதுபோல் மெதுவாக ...
நீரைப்போல் வடிவமற்றுப்போய்
அர்த்தங்களின் பள்ளத்தாக்குகளில்
தங்கிவிடுங்கள் -
புரிதலில் சிரமமுள்ள
உயரங்களில்
முயற்சித்து மெல்ல ஏறுங்கள்...
வலதுகாலெடுத்து
கார்முகிலன் கதறினான்...
கண்டுகொள்ளும் கதியில் இல்லை நான்...
வானராசன் வனராசனாய் முழங்கினான்...
வளைவை தீண்டிய ஒலி
விரையவில்லை செவிப்பறைக்குள்...
விரட்டும் மழையும் மறந்து…
விடலைப் பருவம் ஒருகணம் நுழைந்து...
விரிய ஆவல் விழிகொண்டு
அரிய ஐந்து விரல்கொண்டு
கரிய நாவல் பறித்தேனே...
பிரியமுடன் கொரித்தேனே...
பாலன் வேடம் தரித்தேனே...
பசுமை புரட்சி படைக்கும் முயற்சி
==பாதை வகுத்த பழைய நாட்கள்
பசுமை வளர்க்க, நீயும் நானும்
==பழகிய நட்போ நினைவில் மலர்ச்சி.
பள்ளிக் கூடம் நானும் போக
==பக்கத் துணையாய் வந்த நீயும்
தள்ளி நின்று மழைக்கு ஒதுங்கி
==தனித்த நாளின் நனைதல் எனக்குள்
தண்ணீர் பஞ்சம் போக்கக் கட்டாந்
==தரையில் எங்கும் மரங்கள் நாட்ட
எண்ணங் கொண்ட இனிய நாளின்
==ஏக்கம் இன்னும் வற்ற வில்லை
மழைநாள் ஊரில் வெள்ளம் புகவே
==மணலை ஆற்றில் அகழ்வோர்க் செய்த
பிழைகள் கண்டு பிடித்துச் சொன்ன
==பெருமை வெள்ளம் மனதுள் பொங்கும்
தேர்தல் காலம் மட்டும் வந்து
==திரும்பிப் பாரா தலைவர் கண்டால்
நார்நார் என்றுக்
கனவே .., கவியே..,
கண் திறந்தால் வாராயோ..?
புனலோ…, அனலோ..,
புலம் பெயர்ந்து போவாயோ..?
மறைபொருள் காண
மனம் தானே நாவாயோ..?
பிணவாசம் கடந்து
பேரின்பம் தாராயோ..?