புதுக்கவி - பாரதியின் பரிசு

மரபிழந்த தமிழர்தம்
மாண்புயர மனங்கொண்டு
மரபுக்கவியும் மாரீசனாய்
மாற்றுருதான் கொண்டு
குரவுகமழ் புதுக்கவியென
குவலயம் வந்ததே..!
கரந்தை மலரன்ன
கலந்த வண்ணம்
விரவிடும் வளிபோல்
விசித்திர கவி மேல்..!
புறவின் செறிவும்
பூவின் கவினும்
அரவின் நஞ்சும்
அபலையின் நெஞ்சும்
திறனின் தாகமும்
தவிப்பின் வேகமும்
பரவியே வீறிடும்
பாரதியின் பரிசிடம்..!

எழுதியவர் : அஞ்சா அரிமா (19-Jul-16, 11:45 pm)
பார்வை : 164

மேலே