அன்பும், பண்பும்

அன்பால் வெல்லலாம்
அன்பால் இழக்கலாம்

பண்பால் அடையலாம்
புகழை
பண்பால் தொலக்கலாம்
பெருமையை .

தக்கவரிடத்தில் அன்பு
வழி கோலும் சிறப்பை .

தகாதவரிடத்தில் அன்பு
வழி விடும் கேட்டை.

நற்பண்பு தூக்கி விடும்
உயரத்திலே.

நன்னெறி நிலைத்து விடும்
தன்னாலே.

மாறிய பண்பு அலைக்கழிக்கும்
வேகமாகவே.

மாற்றிய நேரத்தில்
மறுத்தளிக்கும் நன்மையை
கொடுத்தழிக்கும் கொடுமையை.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (20-Jul-16, 11:02 am)
பார்வை : 4520

மேலே