நம் உரத்த சிந்தனை சூலை, 2016 - நேரிசை வெண்பாக்கள்

பரிசு பெற்ற வெண்பாக்கள்

அறம்சொல் அருட்பா அளித்திட்ட வள்ளல்
குறள்சொன்ன வள்ளுவர், புத்தர் – மறைமுதல்வன்
இல்லை யெனவுரைத்த ஈவேரா இங்கர்சால்
எல்லோரும் நல்லவரே ஈண்டு! 1 – ந.ஞானசேகரன்

நில்லாது பெய்த நெடுமழையில் வீடிழந்தோம்;
பொல்லாத வெள்ளம் பெருக்கெடுத்து – அல்லலுற்று
சொல்லொணாத் துன்பங்கள் சூழினும் காத்துநின்ற
எல்லோரும் நல்லவரே ஈண்டு! 2 – ம.ஜனனிபாரதி

நான் அனுப்பிய இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

முற்பகலில் செய்ததெல்லாம் மூண்டுவந்து செவ்வையாய்ப்
பிற்பகலில் தோன்றுமென்ற பேருண்மை – அற்பகுண
கல்லாதார் பட்டறிந்தால் காலமெல்லாம் பாடில்லை;
எல்லோரும் நல்லவரே ஈண்டு! 1 - வ.க.கன்னியப்பன்

குற்றநிறை சூது களவுதனை சுட்டெரித்து
அற்றமற மெய்வருத்தி ஆத்மார்த்த – பொற்புடனே
இல்லோர்க்குத் தொண்டுசெய் தா(ல்)அரசி யல்வாதி
எல்லோரும் நல்லவரே ஈண்டு! 2 - வ.க.கன்னியப்பன்

நம் உரத்த சிந்தனை, ஆகஸ்டு, 2016 நேரிசை வெண்பாப் போட்டிக்கான ஈற்றடி:

உயிர்வாழ உன்னுடம்பை ஓம்பு!

அனுப்ப வேண்டிய முகவரி:

ஆசிரியர்,
நம் உரத்த சிந்தனை,
6, வீர சவார்கர் தெரு,
இரமணா நகர், பெரம்பூர், சென்னை 600 011

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-16, 3:15 pm)
பார்வை : 101

மேலே