கனமழையில் கனிச்சுவை

கார்முகிலன் கதறினான்...
கண்டுகொள்ளும் கதியில் இல்லை நான்...
வானராசன் வனராசனாய் முழங்கினான்...
வளைவை தீண்டிய ஒலி
விரையவில்லை செவிப்பறைக்குள்...
விரட்டும் மழையும் மறந்து…
விடலைப் பருவம் ஒருகணம் நுழைந்து...
விரிய ஆவல் விழிகொண்டு
அரிய ஐந்து விரல்கொண்டு
கரிய நாவல் பறித்தேனே...
பிரியமுடன் கொரித்தேனே...
பாலன் வேடம் தரித்தேனே...

எழுதியவர் : அஞ்சா அரிமா (14-Jun-15, 1:14 am)
பார்வை : 114

மேலே