என்னோடு கூடவே
எண்ணெய் தேச்சு குளிக்க
வைக்க பாடு பட்ட அம்மா ..
தினமும் தலையில் தண்ணீர்
ஊற்றி குளிக்க சொன்ன அப்பா
வீட்டுப் பாடத்தை எழுதி தந்து
விளையாடப் போய் வா என்ற அக்கா..
யாருமே ..
இப்போது இல்லை ..
என்னோடு..
ஆனாலும்..
இங்கே ..அங்கே..என்று..
யார் வடிவத்திலாவது
என் கூடத்தான் வந்து கொண்டே
இருக்கிறார்கள் ..
இன்று வரை
என்னோடு ..!
திரும்பி வராதவள்..
பிரிந்த காதலி மட்டும்தான் !
..
என்று எழுதி வைத்துவிட்டு
புரண்டு படுத்துக் கொண்டான்..
மரத்தின் கீழே..
அந்த மனிதன்!