பாலகங்காதரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாலகங்காதரன் |
இடம் | : திருவாரூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 138 |
புள்ளி | : 19 |
இமயத்தின் நிழலில் எழுதக் கற்றவன் ..
அவர் ஆசியில் எழுதிப் பார்க்கின்றேன்..
மொத்தத்தில் ..
இறைவனின் பிச்சை நான் ..
அதற்கு மேல் ஒன்றும் இல்லை !
எண்ணெய் தேச்சு குளிக்க
வைக்க பாடு பட்ட அம்மா ..
தினமும் தலையில் தண்ணீர்
ஊற்றி குளிக்க சொன்ன அப்பா
வீட்டுப் பாடத்தை எழுதி தந்து
விளையாடப் போய் வா என்ற அக்கா..
யாருமே ..
இப்போது இல்லை ..
என்னோடு..
ஆனாலும்..
இங்கே ..அங்கே..என்று..
யார் வடிவத்திலாவது
என் கூடத்தான் வந்து கொண்டே
இருக்கிறார்கள் ..
இன்று வரை
என்னோடு ..!
திரும்பி வராதவள்..
பிரிந்த காதலி மட்டும்தான் !
..
என்று எழுதி வைத்துவிட்டு
புரண்டு படுத்துக் கொண்டான்..
மரத்தின் கீழே..
அந்த மனிதன்!
ஏதோ ஒரு ஜனசந்தியில்
என் பயணம் நுழையும்..
நேரம் ...
என் பிறப்பிற்கு
அர்த்தம் புரியலாம்..
புரியாமலும் போகலாம்..
அதுவரையில்..
உங்கள் பரமார்த்த குருவாக
என்னை ஏற்று..
என் வழியில் வாருங்கள்..
உங்கள் மீட்புக் காலத்தில்..
உங்களுக்கு அது உதவக்கூடும்!
நம்பிக்கைதான்
வாழ்க்கை!
உப்பு விற்கப் போன
உலகநாதனுக்கு
வெயில் சுட்டெரித்தது..
தவிடு விற்கப் போன
தண்டபாணிக்கு..
புழுக்கமாயிருந்தது..
வியாபாரம்..
நல்லாத்தான் இருந்தது..
மனசுதான் ..
நிம்மதி இல்லாமல் இருந்தது..
இருவருக்கும்..!
மறு நாள்
வீசிய புயல் காற்றும்
அடாத மழையும் ..
மறுபடியும்
கவலை கொள்ள செய்தது..
இருவரையும்!
இவனைப் பார்த்தால்
பிடிக்கவில்லை..
அவனைப் பார்த்தால்
பிடிக்கவில்லை..
எவனைப் பார்த்தாலும்
எவளை பார்த்தாலும்
எதைப் பார்த்தாலும்
பிடிக்கவில்லை..
எந்தக் கழுதையையும்
பிடிக்கவில்லை..
என்னைப் போல் சுமை தூக்க
வேறு கழுதை உண்டா..
நான் கத்துவது
யாருக்கேனும் கேட்கின்றதா..
..
இங்கே பாருங்க..
கத்திக்கிட்டு இருக்கும் போதே..
இன்னொரு மூட்டையும்
ஏத்திட்டான்
படுபாவி..
..
ஹ்ம்ம்.
காலம் பூரா
இப்படியே
தான்..
இருக்கணும் போல!
ஒரு அரிப்பு
=====================================================ருத்ரா.
ஒரு கவிதை எழுத ஆசை.
அதை எல்லோரும் படிக்க மிக மிக ஆசை.
ஆனால்
உலகத்தில் இதுவே தான்
எல்லா பேராசைகளையும் விடவும்
பெரிய பேராசை.
ஆமாய்ய்ய்யா ஆமா...
நீ எழுத்தால் துப்புவதற்கு
நாங்கள் பூச்செண்டு நீட்ட வேண்டுமா என்ன?
உன் தினவுகளும் அரிப்புகளும்
உன் சொற்களில் அரிதாரம் பூசிக்கொண்டு வரும்போது
நாங்கள் விசில் அடிக்க வேண்டுமா என்ன?
எங்கோ ஒரு மொட்டைவானத்தின்
மடிக்காம்புகளை பிதுக்கி
ஞானப்பால் பீய்ச்சுகிறேன்
என்று உன் மனப்பால் நிரப்பிய பேனாக்களின்
நிப்புகள் எங்களை பிறாண்டவேண்டுமா என்ன?
இல்லாவிட்டால்
அன்று உன் பூச்சிமய
இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்
===================
அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்
===================
அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்
===================
பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்
===================
அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்
===================
எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை
அ
மன்னராட்சி முறை ஒழிக்கப் பட்டு ஜனநாயக ஆட்சி முறை வந்து விட்டாலும் கூட அலுவலகங்கள் கட்சிகள் , பத்திரிகைகள், ஊடகங்கள், திரைத்துறை, கலைத்துறை-சங்கீத உலகம், எழுத்து துறை, பள்ளி,கல்லூரிகள், தாதாக்கள் என்று எங்கு பார்த்தாலும் அதிகாரம் படைத்த மன்னர்களும் சுயநல அடிவருடிகளும் இருந்து கொண்டே இருப்பதை நம் நாட்டில் வித்தியாசமின்றி எல்லா இடங்களிலும் காண முடியும். ஏனைய முன்னேறிய நாடுகள் இத்தகைய கலாச்சாரத்தினை ஆதரிப்பதுமில்லை..அவசியம் என்று நினைப்பதுமில்லை.. MNC நிறுவனங்களில் இது கண்கூடு.நிறுவனத்தின் MD ஐய (...)
மகனுக்கு ஒரு நீதி
மகளுக்கு ஒரு நீதி..
மகளின் கணவன்
வீட்டை மறந்து
ஐக்கியமாக வேண்டும்
தங்களோடு..
மகனின் மனைவி
எல்லாம் மறந்து
வேலைக்காரியாக
இருக்க வேண்டும்..
மகளின் கணவன்
மறு மகன் போல்
இருக்க வேண்டும்
மகனின் மனைவி
மறு மகள் ஆக
மாறிடக் கூடாது
இப்படி மனப்பாங்கு
இருந்திட..
வாழ்வில்
நிம்மதி ஏது?
இப்படியும்
சில பிறவிகள்..
அதிசயம்தான்..
போங்கள்!