மன்னராட்சி முறை ஒழிக்கப் பட்டு ஜனநாயக ஆட்சி முறை...
மன்னராட்சி முறை ஒழிக்கப் பட்டு ஜனநாயக ஆட்சி முறை வந்து விட்டாலும் கூட அலுவலகங்கள் கட்சிகள் , பத்திரிகைகள், ஊடகங்கள், திரைத்துறை, கலைத்துறை-சங்கீத உலகம், எழுத்து துறை, பள்ளி,கல்லூரிகள், தாதாக்கள் என்று எங்கு பார்த்தாலும் அதிகாரம் படைத்த மன்னர்களும் சுயநல அடிவருடிகளும் இருந்து கொண்டே இருப்பதை நம் நாட்டில் வித்தியாசமின்றி எல்லா இடங்களிலும் காண முடியும். ஏனைய முன்னேறிய நாடுகள் இத்தகைய கலாச்சாரத்தினை ஆதரிப்பதுமில்லை..அவசியம் என்று நினைப்பதுமில்லை.. MNC நிறுவனங்களில் இது கண்கூடு.நிறுவனத்தின் MD ஐயே Hi John Braser என்று ஒரு கடை நிலை மென்பொருள் பொறியாளர் அழைக்க முடியும்..பேசாமல் மீண்டும் நாமெல்லாம் பாளையக்காரர்கள், குறுநில மன்னர்கள், ராஜாக்கள், துபாஷ், சுல்தான்கள் , என்று நேரடியான அதிகார முறைக்கு மாறி விடலாம் போல் தோன்றுகிறது..ஓர் விமான நிலையத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமாவை பார்த்ததும் அங்கு கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டே "ஹை" என்று அழைத்து புன்னகைத்து அமர்ந்திருக்கும் பென்ன்மணி போல இங்கே ஒரு ஆணையாவது பார்க்க முடியுமா..மேலே விமானத்தில் அல்லது ஹெலிகாப்டரில் தலைவர் பறந்தாலே கீழே விழுந்து கும்பிடும் அதிசயம் (தலைவரே அதை விரும்பினாலும் விரும்பா விட்டாலும்) நம்மூரில் தான் காண இயலும்.. என்றைக்கு நாம் முன்னேறிய நாடாக முடியுமோ..எங்கள் தலைமுறையிலாவது முடியுமென்றால் இப்போதைக்கு வழியிருப்பதாக தெரியவில்லை..!