எழுதப்படாத நீதிகள்
மகனுக்கு ஒரு நீதி
மகளுக்கு ஒரு நீதி..
மகளின் கணவன்
வீட்டை மறந்து
ஐக்கியமாக வேண்டும்
தங்களோடு..
மகனின் மனைவி
எல்லாம் மறந்து
வேலைக்காரியாக
இருக்க வேண்டும்..
மகளின் கணவன்
மறு மகன் போல்
இருக்க வேண்டும்
மகனின் மனைவி
மறு மகள் ஆக
மாறிடக் கூடாது
இப்படி மனப்பாங்கு
இருந்திட..
வாழ்வில்
நிம்மதி ஏது?
இப்படியும்
சில பிறவிகள்..
அதிசயம்தான்..
போங்கள்!