அம்மாவின் கணவன்

விடுமுறை
இல்லா பசி
அவனுக்கு
என்மீது.....

கிழிந்த சேலை
தெரியாத
அவனுக்கு
கிழிசலின் வழி
தெரியும்
சதைப்பிண்டம்
மட்டும் தெரிவது எப்படி....?

பார்வைக்குள்
படர்ந்திருக்கும்
விம்பங்கள்
எப்போதும்
அந்தரங்கத்தையே
சேமிக்கிறது
அவன்
விழித்திரையில்....

அவன்
கசக்கலில்
தவித்திருக்கும்
என் மேனிக்கு
ரணங்களும்
பழகிவிட்டது....

கதவுக்கு
தாழிட தெரிந்த
அந்த நரனுக்கு
என் கழுத்திற்கு
தாலி கட்ட
தோன்றவில்லை....

ஒரு வேளை
அவன் மனைவியின்
மகள்
நான் என்பதாலோ......?

என்
கதறிய நாவும்..
சிதறிய வார்த்தைகளும்...
கலங்கிய கண்களும்....
நொறுங்கிய இதயமும்....
எப்போதும் அவன்
காமப்பிடியிலேயே
ஜீவிக்கிறது...

அவனது
பார்வை
என் தங்கை மீது
படர்ந்து விடக்கூடாது
என்ற அச்சத்தில்......!!!

எழுதியவர் : ம.கலையரசி (2-Mar-15, 10:11 am)
Tanglish : ammaavin kanavan
பார்வை : 96

மேலே