காதற்கிலியில் ஓர் காதலி

அருகே வா வா ஆத்ம தோழா..!
அபலை நெஞ்சின் அன்பும் பாழா..?
காதல் வலியில் வேகுற நானே...
காதற்கிலியில் சாகிற மீனே..!
காக்கை போலே கரைந்திடவா..?- நேசா
யாக்கைக்குள்ளே மறைத்திடவா..?
அருகே வா வா ஆத்ம தோழா..!
அபலை நெஞ்சின் அன்பும் பாழா..?
வெட்டுபற்கள் தன் விரதம் முறிக்காதா..?- என்
கோரைப்பல்லும் கூட கொள்கை மறக்காதா..?
கன்னியின் கண்களும் கற்பினை துறக்காதா..?
காதலை உமிழ்ந்து காற்றிலே பறக்காதா.?
அருகே வா வா ஆத்ம தோழா..!
அபலை நெஞ்சின் அன்பும் பாழா..?
நிழலென ஒன்றவா நெருப்பினை எரித்தே ..!
விழியால் நிரப்பவா வித்தகன் விழியை ..!
விரல்கொண்டு கோதவா காதலன் குழலை ..!
சத்தமிட சொல்லவா என் முத்ததசையை.?