காதலியின் வருகை
எங்கே இருக்கிறாள் என் அழகு தேவதை.
மனதில்ஆயிரம் சோகங்கள்...
அருகில் ஆயிரம் சொந்தங்கள்..
இருந்தாலும் தேடிக் கொண்டு இருக்கிறேன்..
எனக்கு ஆறுதல் சொல்ல..ஒரு வேளை ..
என்னைத் தேடி வருவாளே ? இல்லை
நான் தேடிப் போகப் போகிறேனோ..?
என்று தெரியவில்லை.
காதலிக்க விருப்பமில்லை
எனக்கு - ஆனால்
ஆயிரம் ஆண்டுகள் அவளோடு
வாழ வேண்டும்...
அந்த காதலையும் தாண்டி ஒரு உணர்வோடு ..
தென்றலே என்னிடம் அனுப்பி வை
அவளின் மூச்சுக் காற்றை ....
சிலகாலமாவது மகிழ்ச்சியாக சுவாசித்துக் கொள்கிறேன்..
அவளின் அன்பான வார்த்தையுடன்
இணைந்த மூச்சு காற்றிற்காக காத்திருக்கிறேன்.