இதல ஒன்னும்

இதல ஒன்னும் !

மதியழகன் : அம்மா …நாவந்து ஒரு மணி நேரம் தூங்கி எழுந்து
படிக்கரம்மா …நாளைக்கி பரிட்ச எட்டு மணிக்கு
ஆரம்பம்……

அம்மா : இப்ப படுக்க போனா வழக்கம் போல தூங்கிடுவ ! அதனால
அளாரத்த பிர்ம முகூர்த்த டைம் நாலர மணிக்கு வெச்சி
யெந்திரி …வேணும்னா நா எழுப்பி விடவா ?

மதியழகன் : அப்படியே சுட சுட காப்பியும் போட்டு என்னெயும்
எழுப்பி விட்டுடுங்க…….

அம்மா : மொத்தல்ல ..அந்த அளாரத்த சரியா வெச்சி என்னெ
எழுப்பவெய்……புரிஞ்சிதா …..பழக்க தோசத்தல
தூங்கி தொலெச்சிட போரன் !

மதியழகன் : பயம் இருக்கில்லெ ………அளாரத்த தலெயல தட்டி
முன்ன தூங்கனது ?

அம்மா : இதல ஒன்னும் கொரெச்சலில்ல !

எழுதியவர் : மு.தருமராஜு (3-Apr-25, 7:24 pm)
பார்வை : 6

சிறந்த நகைச்சுவைகள்

மேலே