நீதான் நீதான் நீர்தான்

புனலே எழிலே
புவியோன் துணையே..!
மலரின் உயிரில்
மதுவாய் நீதான்..!

கயலின் களியின்
காரணம் நீதான்..!
மணலின் உள்ளே
உயிரும் நீதான்..!

வயலின் வாழ்வின்
வசந்தம் நீதான்..!
புயலின் பின்னே
புதிரும் நீதான்..!

முகிலின் கருவில்
மழலை நீதான்..!
அகிலம் தேடும்
அழகி நீதான்..!

இரவில் உறங்கா
இரைகடல் நீதான்..!
கருவில் உயிரின்
கவசம் நீதான்..!

காதலர் விழியின்
கவிதை நீதான்..!
பாலகர் பருகும்
பாலது நீதான்..!

நீதான் நீதான்
நித்தம் நிலவில்
நீசர் தேடும்
நீரது நீதான்..!

நாடுகள் தேடும்
சீதையே நீர்தான்
நாடக உலகில்
ராமனும் யார்தான்..?

எழுதியவர் : அஞ்சா அரிமா (24-Mar-17, 9:10 am)
பார்வை : 146

மேலே