அக்னியில் சிறகு
ஐயனே பாரதி,,!
அக்னிக் குஞ்சொன்று கண்டாயோ நீ..??
ஐயகோ..! எங்ஙனம் விளம்புகேன் யான்
அக்னியில் சிக்குண்ட குஞ்சென்று அதனை..!
சிறகை ‘நீட்’டியே பறந்து
சிகரம் நோக்கிய பருந்து..!
கருகி வீழ்ந்தது தரையிலே..!
கனவுகள் மிதந்தது நுரையிலே..!
கருகிய சிறகின் சாம்பல்
திருநீறு ஆகிட வேண்டாம்..!
உரமாய் மாறிட வேண்டும்..!
உயிரே.! மரமாய் உருபெற வேண்டும்..!