காதலிலன் இல்லாது காதல்
விரும்பி கேட்ட பாடல்
வரிகள் காதுமடல் கடக்க
விழிகள் விரிய காதல்
கொள்கிறேன்
படித்ததில் பிடித்தது
நினைவில் எட்ட
இதழை எட்டிய நகையில்
காதல் கொள்கிறேன்
தணலில் தவழும் நிலவு
இரவை தழுவி கூடல் கொள்ள
உறக்கத்தோடு ஊடலாய் காதல்
கொள்கிறேன்
நம்பிக்கை உடைந்து விழ
உள்ளம் உதிர்க்கும் உதிரம் அழைக்க
உதவிக்கு வரும் விழிநீரோடு
காதல் கொள்கிறேன்
இடரி விழுந்துவிட்ட தருணம்
அனிச்சையாய் அணைக்கும்
தோழனின் கனிந்த கரங்களோடு
காதல் கொள்கிறேன்
உதிரும் போதும் உதிரா
புன்னகை சூடி கார்குழலில்
கர்வமாய் வீற்றிருக்கும் பூவரசோடு
காதல் கொள்கிறேன்
இரை தேடி இரைப்பை
இரைக்க வளியோடு
இரங்கி வரும் உணவின்
மணத்தோடு காதல் கொள்கிறேன்
சோம்பல் தெளியா செங்கதிரை
ஆம்பல் சாடும் வேளையில்
இலையோடு பனியாய் தலையணையோடு
காதல் கொள்கிறேன்
அரும்புமீசை முறுக்காத காதல்
தாவணிகனவுகள் காணாத காதல்
அன்றில் அறிந்திடாத காதல்