உயர்வு வராதே

உயர்வு வராதே!

விதைப் பழுதானால்
விருட்சமாகாது!
வினா பழுதானால்
விடை எழாது!

நூல் பழுதானால்
ஆடை ஆகாது!
பால் பழுதானால்
புகட்ட லாகாது!

கல் பழுதானால்
சிலை ஆகாது!
சொல் பழுதானால்
மதிப்பு பெறாது!

உண்மை பழுதானால்
உலகம் மதிக்காது
உழைப்பு பழுதானால்
உயர்வு வராதே!

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (21-Feb-16, 9:08 pm)
பார்வை : 383

மேலே