வெற்றி

இருளை விலகச்செய்வோம்
கவலை மறக்கச்செய்வோம்
உலகம் வியக்கச்செய்வோம் வா

நெஞ்சில் நடுக்கம் வேண்டாம்
கண்ணில் கலக்கம் வேண்டாம்
என்றும் தயக்கம் வேண்டாம் வா நண்பா வா

ஓடு ஓடு ஓடு முன்னேற நீயூம் ஓடு
தேடு தேடு தேடு சந்தோஷம் உன்னில் தேடு

தடையில்லா வாழ்கை ஒன்று
விடையில்லா கேள்வி ஆகும்
தடை தாண்டி முன்னே சென்றால்
சுகம் நம்மை வந்தே சேரும்

கற்களைக் கடக்கவே அருவிநீர் கடல் சேருமே
முற்களைக் கடக்கவே வெற்றியுன் கைசேருமே

யாவுமே புவியினில் கஷ்டங்கள் கண்டதில்லையா
விதிகளை மீறிட நீ மகிழ்சிகள் பெற்ற பிள்ளையா

பொறுமைகொள் வெற்றிகள் என்றுமே தூரமில்லை
சினங்களும் வன்மமும் வாழ்க்கையில் தேவையில்லை

விழுந்தவன் எழுந்ததில்லை
எழுந்தவன் முயன்றதில்லை
விழுந்தபின் எழுந்தபின் முயன்றவன் தோற்றதில்லை

விதிகள்போல் நடக்குமே
பொறுமைகொள் என்றுமே
வெற்றிகள் கிடைக்குமே
தங்கமே தங்கமே !!!

எழுதியவர் : S. அரவிந்த் (24-Feb-16, 11:10 am)
சேர்த்தது : AravindS11
Tanglish : vettri
பார்வை : 312

மேலே