காதலும் கனவும் கண்ணீரும்

அவளை பார்க்க முடிந்தும்,
அவளை உணர முடியவில்லை ,
அவளிடம் பேச நினைத்தும்,
என் உதடுகளை அசைக்க இயலவில்லை,
அவளை அழைக்க எண்ணியும்
என் கைகள் எழவில்லை,
ஆனால், என் நினைவில் மட்டும்
இருந்து என்னை ஆட்டுவிக்கிறாள்.

என்னவென்று எழுந்தால்!
என் தூக்கத்தில் கனவாக வந்தவள்,
என் காதல் ஏக்கத்தின் விழைவாய்,
தூக்கம் நிறைந்த என் கண்களை
கண்ணீரால் நிறைத்து கனவாக சென்றாள்.

எழுதியவர் : பார்த்தசாரதி கி. (7-Feb-15, 12:36 am)
பார்வை : 2824

மேலே