இளமைக்கு வயது எண்பது

மனசுக்கு இல்லை வயது - நமை நாம்
மதிக்காதே நாளே கிழடு.........!!

தோலின் சுருக்கமா முதுமை ? இல்லை இல்லை
தோல்வி பயம் என்பதே முதுமை...!!

வரட்டும் எமனையும் வெல்வோம் - நம்
வாழ்வின் இலக்கணம் சொல்வோம்...!!

தூர எறியுங்கள் ஊன்று கோலை - உண்மையில் உங்களை
தூக்கி நிறுத்துவது தன்னம்பிக்கையே....!!

எழுதியவர் : ஹரி (8-Feb-15, 5:14 am)
பார்வை : 595

மேலே