சக்தியை ஒன்று திரட்டுங்கள் - சந்தோசிக்கட்டும் நமது பிரபஞ்சம்

எங்கே இருக்குது சக்தி ? - உன்
எண்ணத்தில் இருக்குது சக்தி...
புலனை அடக்கு போதும் - உனக்கு
புவனம் மாலை போடும்...
நேர்மறை எண்ணம் கொண்டால்
நிச்சயம் வெற்றி உண்டு...
நேற்று கண்ட கனவே
நிஜமாய் ஆனது இன்று.....
நாளைய உலகின் பிரம்மன் நீ
நடுக்கம் வேண்டாம் நெஞ்சினிலே...!!