காணொலி ஊடக சாதனைகள்
காணொலி ஊடக சாதனைகள்
************
டேய் நம்ம நண்பன் நாளைக்கு கன்பார்மா வர்றதா அசால்ட்டா சொல்லிட்டாண்டா.
-----
கன்பார்மா அசால்ட்டான்னா என்னடா அர்த்தம்.
------
கன்பார்மான்னா கன்பார்மாத்தான் அசால்ட்டான்னா அசால்ட்டாத் தான்.
----
அட பாவி. கன்பார்ம் அசால்ட் ரண்டுமே ஆங்கிலச் சொற்கள்டா.
Confrm = (make certain, add strength) -ன்னா உறுதி செய்,
திடப்படுத்துன்னு அர்த்தம்.
------
Conform = (be in agreement) ஒத்திருக்கச் செய், அனுசரித்து நட
Assault = (sudden attack, an attack of any kind, attack by argument) திடீர்த் தாக்குதல், தாக்குதல், சொற்ப்போர்த் தாக்குதல்ன்னு அர்த்தம்.
-------
அவன் நாளைக்கு வர்றதா உறுதியாச் சொன்னான்னு சொன்னாப் போதும்டா. உன்னத் தாக்கிட்டு/அடிச்சிட்டா சொன்னான்.
-----
சினிமாவ்லே அப்படித்தாண்ட சொல்லறாங்க.
--------
சினிமாக்காரங்க நமக்கு ஆங்கிலமும் கத்துக் கொடுக்கறதில்ல. அவுங்க மொழிப் பாடம் நடத்தும் வாத்தியாருங்களுமில்லை. புதுமையைச் செய்யறதா நெனச்சு மொழிக் கொலை செய்யறாங்கடா. சினிமா ஒரு காலத்திலே மக்களை நல்வழிப்படுத்தும் எவ்வளவோ சாதனைகளை புரிஞ்சிருக்கு. சமூகப் படங்கள் வர ஆரம்பிச்ச காலத்திலெ இருந்தே தேவை இல்லாம ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துவதும் அவற்றைத் தவறான பொருள்[பட பயன்படுத்துவதையும் தவறாக உச்சரிப்பதையும் சாதனையா நெனைக்கறாங்க. படிச்சவங்களும் சினிமாத் தமிழைப் பேசுவது தான் சங்கடமாக இருக்குடா.
------
அதுக்கு நீயேண்டா டென்ஷன் ஆகற?
--------
டென்ஷன்னா என்னடா அர்த்தம்?
என்னடா இதெல்லாம் ஒரு கேள்வியா? டென்ஷன்னா டென்ஷன் –தான்.
------
ஏண்டா நீ ஒரு பட்டதாரின்னு பெருமையாச் சொல்லிக்கிற. உங்கிட்ட அகராதி கிடையாதா? அதப் பாக்கமாட்டயா?
Tension- ன்னா = (act of straining; strong mental strain; stress, exertion, overstrain, rigidity, firmness, tenseness) வலிந்திழுத்தல், கடுமையான மனத்தாக்குதல் -ன்னு அர்த்தம்.
நாம வெள்ளக்காரங்களப் பாத்துத் திருந்துனும்டா. ஆங்கில மொழில இல்லாத சொற்களைத் தான் அவுங்க ஆங்கில மொழி அமைப்பிற்குத் தகுந்த மாதிரி மாத்திப் பயன்படுத்ர்ஹறாங்க. ஆங்கிலத்திலெ ஆழிப் பேரலை கடற்கோள் போன்ற சொற்களுக்கு இணையான சொல் எதுவும் கிடையாது. அவன் ஜப்பானிய மொழியிலிருந்து சுனாமி ( Tsunami )-ங்ற சொல்லக் கடன் வாங்கிப் பயன்படுத்தறாங்க.
----
மாங்காய் அவனிடம் Mango ஆக மாறுது, கட்டுமரம் catamaran ஆகுது, மிளகுத் தண்ணீர் (மிளகு ரசம்) mulligatawny ஆகுது, பச்சை இலை (a strong perfume) patchouli ஆகுது , கயிறு coir ஆகுது, சுருட்டு cheroot ஆகுது. இந்தச் சொல் எல்லாம் தமிழில் இருந்து ஆங்கில மொழிக்குச் சென்றவை. ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியில் இல்ல்லாத சொற்களைத் தான் பிற மொழிகளிலெ இருந்து கடன் வாங்கி ஆங்கில மொழி அமைப்பிற்கு தகுந்த மாதிரி புதிய சொற்களை உருவாக்கறாங்க. எப்படி Computer, Mobile phone போன்ற ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் கணினி, அலைபேசி (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேசப் பயன்படுவதால்) செல்பேசி என்று புதிய சொற்களை உருவாக்கறோம்.
இது போல புதிய சொற்களை உருவாக்கமுடியாமல் பிற இந்திய மொழிகளைப் பேசுவோரெல்லாம் திணறுகிறார்கள். புதிய சொற்களை எளிதால உருவாக்கும் நாமோ பேச்சு வழக்கில் பயன்படுத்தத்தான் வெட்கப்படுகிறோம். எல்லாம் சினிமாத் தமிழ் மோகம்.
ஆங்கிலம் கலந்து பேசினால் தான் மரியாதை கிடைக்கும் என்று கற்றவர்களே நினைக்கும் அவல நிலை. வெள்ளைக்காரங்களும் லத்தீன், ஸ்பானிஷ், பிரச்ஞ்சு போன்ற மொழிகளில் ஏதாவது ஒன்றைத் தாய் மொழியுடன் கூடுதலாக இரண்டாவது மொழிப்பாடமாகப் படித்தவர்கள் தான். அவர்கள் நம்மைப் போல் மொழிக்கொலை செய்வதில்லை. நமக்கு சினிமாக்காரங்களும் பிற ஊடகங்களும் தான் மொழியியல் பேராசிரியர்களாக இருக்கறாங்க.
நெலத்திலெ நிலக்கடலை/வேர்க்கடலை பயிரிட்டிருக்கறோங்றதத் தான் கடலை போட்டிருக்கேன்னு சொல்லுவாங்க. இப்ப சினிமாக்காரங்க கடலை போடறதுக்குத் தர்ற அர்த்தம் வேற. சின்ன வீட்டின் கதையும் அப்படித்தான். சள்ளு ஒழுகுதல் (வாயிலிருந்து குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் வடியும் நீர்) ஜொள்ளு ஆகிவிட்டது.
அது மட்டுமா காணொலி ஊடகத்தாரால் தமிழ் உச்சரிப்பு மிக மோசமான நிலையை நோக்கி வேகமாகச் செல்கிறது. பல்லி balli என்றும், காலி என்பதை gaali என்றும், குனிந்து என்பதை guninthu என்றும் கேலி என்பதை geli என்றும் கொஞ்சம் என்பதைக் கொஞ்ச்சம் என்றும் கெஞ்சு என்பதை genju என்றும் காணொலி ஊடகத்தில் உச்சரிக்கிறார்கள். இதனால் வெளிநாடுகளில் வாழும் நல்ல தமிழ் பேசும் தமிழர்களும் சென்னைத் தமிழையும் சினிமாத் தமிழையும் கற்றுக்கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.