தென்தமிழ்

மனிதம் தன உள்ளத்து உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தப் படைத்துக் கொண்ட ஒரு நாகரீக கருவி "மொழி" ஆகும்.உலகில் பல மொழிகள் பேசப்படினும், அனைத்து மொழிகளுக்கும் மூலமொழியாக -முதல் மொழியாக ஒரு மொழி இருந்திருக்க வேண்டும். அம்முதல் மொழி தமிழ் மொழியே என்பது ஆய்வாளர்கள் பலரின் கருத்தாகும்.இதற்குக் காரணம் உலகில் பேசப்படும் பழமையான மொழிகள் பலவற்றிலும் தமிழ்ச்சொற்கள் கலந்திருப்பதைக் காண்கிறோம்.

இலெமூரியாக் கண்டம் என்று அழைக்கப்படும் குமரிக்கண்டத்தில் தான் முதல் மனிதன் தோன்றினான் என்பர் . பரிணாமக் கொள்கையைத் தந்த டார்வினும் மனிதன் தோன்றியிருக்கலாம் என்று தேர்ந்தெடுத்த இடம் இலெமூரியாக் கண்டம் ஆகும் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் .இடையில் உள்ள பகுதி இலெமூரியா என்பது டார்வினின் கருத்தாகும் .
இதைத்தான் நாம் குமரிக்கண்டம் என்று குறிப்பிடுகிறோம். இது இமயமலை நீருக்குள் அமிழ்ந்திருந்த காலத்து நிலப்பரப்பாகும். இங்குதான் குமரிமலை இருந்தது ,பக்க்ருளி ஆறு ஓடியது .கடல்கோள்
ஏற்பட்டபோது குமரிக்கோடு கடலுள் மூழ்கியது போக எஞ்சிய பகுதி தீவாக மாறியது.அப்பகுதி ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் Comoro Islands என்ற பெயரில் தற்போதும் காணப்படுகிறது.நமது இலக்கியங்களில் காணப்படும் குமரிக்கோடுதான் Comoro Islands ஆகும். காரணம் அதைச் சுற்றி அமைந்துள்ள எகிப்து, எத்தியோப்பியா போன்ற நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களும் நம்முடைய பழக்க வழக்கங்களும் ஒத்துப் போவதைக் காணலாம்.

இலெமூரியாக் கண்டம் கடல்கோளால் அழிந்த செய்தியைச் சிலப்பதிகாரத்துடன் சேர்ந்து கலித்தொகையும் சுட்டுகிறது "மலிதிரையூர்ந்து தன்மண்கடல் வெளவலின்" என்ற முல்லைக்கலித்தொடர்இதனை மெய்ப்பிக்கும். இலெமூரியாக் கண்டம் உலகின் மையப் பகுதியாக அமைந்ததால் அங்குள்ள மக்கள் பல்வேறு திசைகளில் சென்று பல்கிப் பெருகினர் .மக்களின் இடப்பெயர்ச்சி தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் ,கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் நிகழ்ந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும் .

வையை ஆற்றுக்குக் " கிருதமாலா " என்ற பெயரும் உண்டு. சத்தியவிரதன் என்ற திராவிட ஈசுவரன் அந்த ஆற்றங்கரையில் தவம் செய்தான்,கடல் பிரளயம் ஏற்பட்ட போது, அவனுடைய படகு வடக்கு நோக்கிச் சென்றது .அவனும் அவன் மக்களும் இட்சுவாகு முதலியோரும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று அயோத்தியை அமைத்தனர் என்று பாகவதம் பேசுகின்றது. மெசபடோமியாவில் உள்ள "ஊர் " என்னும் ஊரில் பிறந்தவன் ஆப்ரகாம் என்பவன்.அவன் பிழைப்பு நாடி ஊருக்கு வடக்கே உள்ள ஹெரோன் என்னும் நகரத்தை நாடிச் சென்றான் .அங்குச் சிலகாலம் வாழ்ந்த பின்னரே எகிப்துக்குத் திரும்பினான் என்பர். மேலும் வெள்ளப் பெருக்கின் போது நோவாவின் படகு தெற்கேயிருந்து வடக்கே உள்ள அராராத் என்ற மலையில் சென்று தங்கியதாக விவிலியம் பேசுகின்றது. மேற்கண்டவை மக்கள் இயக்கம்(இடப்பெயர்ச்சி) தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றதைப் புலப்படுத்தும் சான்றுகளாகும் .

உலகின் பல இடங்களில் கிடைத்துள்ள பற்கள் ,எலும்புக்கூடுகள், மண்டையோடுகள், கைகால் எலும்புகள் ஆகியவற்றுக்கிடையே காணப்படும் ஒற்றுமைப் பண்புகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன .

இராசி வட்டத்தில் (Zodiac) இடம்பெற்றுள்ள கிரகங்களின் இயக்கம் வலமுறையாக (Clock -Wise) அமைந்து காணப்படுகின்றது. அவ்வாறு தோன்றும் காட்சியை நிலநடுக்கோட்டிற்குத் தெற்கேயிருந்து தான் பார்க்க முடியும் . நிலநடுக்கோட்டின் வடக்கே இருந்து பார்த்தால் கிரகங்களின் இயக்கம் இடமுறையாக (AntiClock -Wise ) அமைந்து காணப்படும்.மக்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றார்கள் என்பதை இக்கருத்தும் உறுதிப்படுத்துகிறது . வாரத்தின் நாள்களுக்குத் தமிழர்களைப் போல வானியல் அடிப்படையில் பெயர் சூட்டியவர்கள் யாரும் இல்லை ,எந்த இனமும் இல்லை
.தமிழன் மட்டுமே வானத்தில் உள்ள கதிரவன் ,நிலவு ,கோள்களாகிய செவ்வாய் , புதன் , வியாழன் , வெள்ளி , சனி எனப்பெயரிட்டான் . அவை ஓர் ஒழுங்கு அடிப்படையில் அமைந்துள்ளமை வியப்பைத்தருகிறது ..

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தொடக்க கால மக்கள் பேசிய மொழி -அந்தப் பழைய மொழி - "நம் தமிழ் "...

எழுதியவர் : சுடர்விழி .இரா (11-Feb-15, 9:40 pm)
பார்வை : 1149

மேலே