படித்த கல்வி பயனுற வேண்டும்

வெட்டிய குளத்தில் மழை தேங்குது
வேண்டும்பொழுது வளமும் தருது - இதை
விளங்கிக் கொண்டு படி நீ அழகு - உன்னறிவை
வியக்கும் வண்ணம் உலகுக்கு வழங்கு...!!
தேங்கிய நீரில் கொசுக்களே சேரும் - நீ
பதுக்கிய அறிவில் சுயநலம் போல....எனவே
வேண்டிய மட்டும் அறிவணையை திற
விரும்புமுனை உலகம் உன் சுயநலம் மற...!!